Saturday, May 06, 2006

தேர்தல் விடு..கதை

அரசியல் அந்தர் பல்டிகள் முடிந்துவிட்டன. பிரச்சாரப் புயலும் ஓய்ந்து விட்டது, ஓட்டுகளை எலெக்ட்ரானிக் பெட்டியின் பட்டன்களில் தட்டிவிட்டு, விரலிலே மை தடவிக்கொண்டு, பத்திரிக்கைக் கருத்துக்கணிப்புக்களை நினைத்து வெற்றி பெறுவது அ.இ.அ.தி.மு.க-வா அல்லது தி.மு.க-வா என்று மனக்கணக்கு போடுபவர்களுக்கு ஒரு மனக்கணக்கு...

அ.இ.அ.தி.மு.க வெற்றி பெறக்கூடிய இடங்கள் மற்றும் தி.மு.க வெல்லக்கூடிய இடங்கள் இரண்டையும் சேர்த்தால் மொத்தமே 130 இடங்கள்தான் வரும்.

இதில் தி.மு.க-வை விட அ.இ.அ.தி.மு.க 17 இடங்களை அதிகம் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

அப்படியானால் தி.மு.க எத்தனை இடங்களை வெல்லும்.
அ.இ.அ.தி.மு.க எத்தனை இடங்களை வெல்லும்.

எங்கே உங்கள் விடைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

எலெக்ஷன் ரிசல்ட் வருவதற்கு முன் இந்த மனக்கணக்கிற்கு ரிசல்ட் கண்டுபிடித்து பின்னூட்டம் இடுபவர்கள்-தங்களுக்குத் தாங்களே ஷபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

-மணவை அஜீஸ்

1 comment:

Siraj said...

சமுதாயத்தை காட்டிக்கொடுத்த அயோக்கியர்களின் முகங்களையும் அவர்களின் வேசத்தையும் தமிழக தேர்தல் மூலம் நம் சமுதாயத்திற்க்கு மிக இலகுவாக காட்டிக் கொடுத்த வல்ல இறைவன்னுக்கே எல்லா புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்

ஆரூரான்