Monday, May 22, 2006

விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம்கள்

நவீன விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம்களின் பங்கு

அஹ்மத் ஹஸன் ஜுவைல் (பிறப்பு 1946) வேதியியல் அறிஞர். ஃபெம்டோ வேதியியல் துறைக்குச் செய்த பங்களிப்புக்காக 1999ம் ஆண்டின் வேதியியல் துறை நோபல் பரிசு அஹ்மத் ஹஸன் ஜுவைலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிக மிக நுண்ணிய கால இடைவெளியில், அதாவது ஒரு ஃபெம்டோ வினாடியில் நடைபெறும் வேதிவினைகளை ஆய்வு செய்யும் துறை ஃபெம்டோ வேதியியல் எனப்படுகின்றது. ஒரு வினாடியில் நூறு கோடியில் ஒரு பங்கு. அந்த ஒரு பங்கிலும் பத்து லட்சத்தில் ஒரு பங்கு நேரம் ஒரு ஃபெம்டோ வினாடி என்று சொல்லப்படுகின்றது.எகிப்தில் அலெக்ஸாண்டிரியா அருகில் உள்ள டமன்ஹர் என்ற இடத்தில் பிறந்த அஹ்மத் ஜுவைல் அலெக்ஸாண்டிரியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்றவர். அதிவேக லேசர் நுட்பங்களைப் பயன்படுத்தி அணு நிலையில் நடைபெறும் வினைகளை விளக்கிய அஹ்மத் ஜுவைல் ஃபெம்டோ வேதியியல் துறையின் முன்னோடி.

(நன்றி - தினமணி)
தகவல்: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006

No comments: