Wednesday, May 10, 2006

த.மு.மு.க ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா?

ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா?
சகோ.ஃபழ்லுல் இலாஹிக்கு சில கேள்விகள்:


எழுத்தாளர் சல்மா பற்றிய முகவைத்தமிழனின் பதிவிற்காக சகோ.ஃபழ்லுல் இலாஹி விமர்சனம் செய்திருந்தார். கவிஞர் சல்மாவிற்காக ஜவாஹிருல்லாவும் ஹைதர் அலியும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்கள் என்று எழுதியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தி என்பதையும் தெரிவித்திருந்தார். இதற்கு முகவைத்தமிழன் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

அக்கடிதத்தில்,

//நான் திருந்தி விட்டேன். நான் முஸ்லிம் என்பதால்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே சமுதாயத்திற்காக பாடுபடுவேன். எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று. எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா.

ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா?//

என்று சகோ. பழ்லுல் இலாஹி குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக ஒரு அரசியல்வாதி, கவிஞர், போலி பெண்ணுரிமை பேசுபவர் தன்னுடைய முன்னால் செயல்களுக்கு சமுதாய நலன் கருதும் த.மு.மு.க. போன்ற முஸ்லிம் இயக்கத்திற்கு வருத்தம் தெரிவித்ததை ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற அடிப்படையில் மட்டுமே இந்த விமர்சனப் பதிவு. இப்பதிவின் ஊடே பல விமர்சன குரல்கள் எழலாம். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு என்னுடைய விமர்சனத்திற்கு பதிலை தனியாக சகோ.ஃபழ்லுல் இலாஹி வெளியிடுவார் என்று நம்புகிறேன். அப்படியான பதிலை முத்துப்பேட்டை சகோதரர்கள் தனது வலைப்பதிவில் பதிந்தாலும் சரியே.

ஒரு முஃமின் ஒரு பொந்துக்குள் இரண்டு தடவை குட்டுப்படமாட்டான் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

த.மு.மு.க.வின் வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா தான் பி.ஜே.பி.யுடன் கூட்டு சேர்ந்ததை சொல்லி அதற்குப் பிரயாசித்தமாக பி.ஜே.பி அரசை கவிழ்த்தேன் என்று சொன்னதை த.மு.மு.க.வின் முன்னாள் அமைப்பாளர் ஜெயலலிதா தவ்பா செய்துவிட்டார் என்றார்.

பிறகு அதே பி.ஜே.பியுடன் அவர் கூட்டணி சேர்ந்ததை அனைவரும் அறிவோம்.

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கொடுத்த வாக்குறுதி குட்டுகளாக இருந்துவிடக் கூடாது அல்லவா?

சல்மாவின் வருத்தத்தை பெற்றுக்கொள்வதா இல்லையா?
இந்த போலி பெண்ணுரிமை எழுத்தாளருக்கு பலமும் பலவீனமும் இவரது எழுத்துக்களேயாகும். இவர் மனித சமுதாயத்திற்கு தூவிய விஷ வித்துக்கள் ஏராளம். அப்படிப்பட்டவர் தன் எழுத்துமூலம் தன்னுடைய படைப்புகள் வெளிவந்த இணைய இதழ்கள், பத்திரிகைகள் போன்றவற்றின் மூலம் பகிரங்கமாக, தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொண்டிருந்தால் அவரது வருத்தத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

ஜெயலலிதா ஆணையம் புதுப்பித்ததைப் பற்றி அல்லது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பார் என்பது பற்றி ஏன் அவரது தொலைக்காட்சியில் சொல்லவில்லை?, ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை? என்ற பல கேள்விகளை அடுக்கிய த.மு.மு.க.நிர்வாகத்தினர், ஒரு கவிஞர் அதுவும் அரசியல்வாதி நான் குறிப்பிட்டவாறு பொதுவில் சொல்லாத வருத்தத்தை ஏற்பதா? மறுப்பதா?

ஓரினச்சேர்க்கை, திருமணமாகாத உறவு, மாற்றானுடன் உடலுறவு போன்றவற்றில்தான் பெண்ணுரிமை இருக்கிறது என்று நம்பும் சல்மாவுக்கு த.மு.மு.க. ஆதரவு தெரிவிப்பதை ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்பதை சகோ.ஃபழ்லுல் இலாஹிதான் சொல்லவேண்டும்.

//நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது.//
கருணாநிதிக்கு முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக வேறு யாரையும் தெரியவில்லையா? தி.மு.க. கட்சியினருக்கு எதிரான கருத்துகளை பரப்பும் ஒருவரை தி.மு.க.வின் பிரதிநிதியாக கலைஞர் தேர்ந்தெடுப்பாரா?

//எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று.//

தேர்தலில் தோற்றாலோ அல்லது வெற்றிக்கு பின்வரும் 5 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு என்ன செய்ய போகிறாராம். பொதுவில் வருத்தம் தெரிவித்திருந்தால் மட்டுமே அவரின் பேனா சமுதாயத்திற்கு எதிராக மீண்டும் எழுதுவதை தவிர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியே எழுதினாலும் மக்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா?

//எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா.//

இனி இதுபோன்ற சமுதாயத்திற்கு எதிரான தீய வித்துக்களை பரப்புவதில் எந்த வகையிலும் ஈடுபட மாட்டேன் என்று சொல்வதை மிக கவனமாக தவிர்த்திருக்கிறார்.

குடம் நிறைந்த விஷத்தில் ஒரு துளி பாலை நம் கண்முன்னால் கலந்துவிட்டு அது தன்மை மாறிவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா?. விஷம் முழுவதும் வெளியே கொட்டப்பட்டு வெற்றுக்குடமாக சமுதாயத்திற்கு கிடைத்தால்கூட அதனை ஏற்றுக்கொள்ளலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தீமை வேண்டாமே.

நமது சொந்த விஷயத்தில் தவறுகள் நடந்தது என்றால் நாம் யாரிடத்தும் கேட்காமலேயே மன்னித்துவிடலாம். அவர் செய்த தவறுகள் சமுதாய விஷயத்தில் என்பதை கோடிட்டுக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

//ருகையா மாலிக் என்ற சல்மாவை விட மோசமானவர்களும் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். அதுவும் முஸ்லிம் சமுதாய அமைப்பில் இருக்கிறார்கள். அதன் சார்பில் எம்.எல்.ஏ.வாகவும் ஆகி இருக்கிறார்கள். சல்மா பற்றிய செய்தி வெளி வந்து விட்டது. அவர்களைப் பற்றிய செய்தி வெளியே வரவில்லை அவ்வளவுதான்.//


"சமுதாய நலனே தனது உயிர் மூச்சு" என்று சொல்கின்ற த.மு.மு.க.விடம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மேற்கண்டவை விடையாகிவிடாது.

//ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா? இஸ்லாத்தின் நிலை என்ன?//

சல்மா பற்றிய பொதுவான விஷயங்களில் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, சமுதாய நலனுக்கு எதிராக இஸ்லாம் இருக்குமா என்ற கேள்வியை உங்களுக்கு வைப்பதோடு. இதே விஷயத்தில் இஸ்லாத்தின் நிலை என்னவென்பதைப் பற்றி விளக்கமாக ஆதாரங்களுடன் எழுதுவதற்கு, மதுரையில் நடந்த மாபெரும் தவ்ஹீத் மாநாட்டை தலைமையேற்று நடத்திவைத்த நீங்களே தகுதியானவர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

த.மு.மு.க. ஒரு சமுதாய இயக்கம் என்பதால் சல்மா விஷயத்தில் சமுதாயத்திற்கு என்ன பிரச்னை காத்திருக்கிறது என்பதை அலசினாலே போதுமானது என்பது எனது கருத்து. காரணம் த.மு.மு.க.வின் ஆதரவு சல்மாவிற்கா? என்பதுதான் பிரச்னையின் மைய கருத்தாக நான் புரிந்து வைத்துள்ளேன்.

1 comment:

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


மறியாதைக்கும் , அன்பிற்கும் உறிய சகோ. பஸ்லுள் இலாஹி அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்காக எழுதுகோலை எடுத்தபோது இங்கு சகோ. அபு முஹம்மத் தனது கருத்தை பதிவு செய்திருப்பதை கண்டேன் இவை தான் எனது பதிலாக அமைய இருந்ததும் அதை எழுத்து வடிவமாக்கி இங்கு பிரசுரித்து எனது சுமையை குறைத்த சகோதரரக்கு எனது நன்றிகள். மேற்கன்ட சகோ. அபு முஹம்மதின் பதிவையே சகோ. பஸ்லுள் இலாஹி எனது பதிலாக எடுத்து கொள்ளலாம் அத்துடன் கீழே உள்ள சில கேள்விகளையும் சேர்த்து கொள்ளவும்.

கீழ்க்கானும் கேள்விகளையும் த.மு.மு.க விற்கு வைக்கின்றேன் அபூ முஹம்மதின் கேள்விகளோடு இவற்றிற்கும் த.மு.மு.க வினர் பதில் சொல்ல கடமைபட்டுள்ளர்கள்.

1) த.மு.மு.க அனைத்து முஸ்லிம்களின் பிரதிநிதியா ? சல்மா மொத்த சமுதாயத்திற்கும் செய்த அநியாயத்திற்கு த.மு.மு. விடம் மட்டும் மண்ணிப்பபு கேட்பதற்கு?? அப்படி த.மு.மு.க மண்ணித்து விட்டதென்றால் எந்த அடிப்படையில் மண்ணித்தார்கள்? மொத்த முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான கருத்தை தெறிவித்து விட்டு த.மு.மு.க விடம் மண்ணிப்பு கேட்டால் போதுமானதா ? த.மு.மு.க ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகம் மற்றும் உலகின் மொத்த மார்க்க அறிஞர்களின் அங்கீகரம் பெற்ற இயக்கமா ?

2) இவரை மக்கள் மன்றத்திற்கு இட்டு வந்து மண்ணிப்பு கேட்க செய்திருந்தால் த.மு.மு.க வை பாராட்டி இருக்கலாம் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒரு முர்ததிற்கு தாங்களே சாட்சியாக இருந்து ஞானஸ்னானம்?? செய்து வைத்ததன் மூலம் த.மு.மு.க தனது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது.

3) சல்மாவிற்காக பிரச்சாரம் செய்யவில்லை என்பதை த.மு.மு.க வினர் நெஞ்சை தொட்டு மறுக்கட்டும், த.மு.மு.க வும் அதன் தலைவர்களும் "டான்" டிவி யில் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்றும் "சன் டிவி" போல் விளம்பரங்கள் இட்டும் ஓட்டு கேட்டது உண்மையா இல்லையா ? தமிழகத்தின் வீதிகளிள் ஓடி ஓடி உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்யவில்லையா ? சல்மா என்ன உதிக்காத சூரியன் சின்னத்திலா போட்டியிட்டார் ? உதய சூரியன் சின்னத்தில்தானே ?

4) சல்மாவிற்கு ஒடி ஒடி பிரச்சாரம் செய்யவில்லை என்று மறுப்பவர்கள் பா.ம.க விஷயத்தில் பாய்ந்து வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லையென்பதால் ஆதரவு இல்லை என்று மக்களை ஏமாற்றும் தேர்தல் நாடகம் ஆடினார்களே (பின்னர் அந்தரங்க அக்ரிமென்டுடன் அந்தர் பல்டி அடித்தது வேறு விஷயம்) அது போல் சல்மாவிற்கு எதிராக த.மு.மு.க வினர் யாரும் பிரச்சாரம் செய்யகூடாது , முஸ்லிம்கள் சல்மாவிற்கு ஓட்டு பேரட வேன்டாம் என்று டான் டிவியிலும் மக்கள் உரிமையிலும் அறிவிக்காதது ஏன் ? எது எதுக்கெல்லாமோ மக்கள் உரிமையையும் டானை பயன்படுத்தும் நீங்கள் மிகவும் சென்சிடிவ் மேட்டரான சல்மா விஷயத்தில் செய்யாதது ஏன் ? சல்மாவை ஆதரித்ததால் தானே ?? மறுக்க இயலுமா இதை உம்மால் ? எப்படி ஐயா ஜவாஹிருல்லா சல்மாவை ஆதரிக்கவில்லை என்று எழுதினீர்?

5) சகோ. பஸ்லுல் இலாஹி அவரது கடிதத்தில் திடீரென்று விஷயத்தில் இருந்து நலுவி ""மணியாச்சி காஜா வேட்டியை உருவி விட்டார்கள் காஜா ஜட்டி போடததால் அம்மனமாக கல்லை தேடினார்"" என்று திடீர் காமெடியடித்துள்ளார்...இதை எப்படி எடுத்துகொள்வது ?

இதற்கு மேல் என்ன எழுதுவது தோன்ட , தோன்ட நாற்றம் தான் ... I dont want to open the lid of this ...... than the stink will be intolerable. மக்களும் பார்வையாளர்களும் தீர்மானித்து கொள்ளுங்கள்.

குறிப்பு : சகோ. பஸ்லுல் இலாஹி அவர்கள் மிக அக்கறையுடன் அவரது பதிலை சல்மாவிற்கும் தினமளர் போன்ற ஃபாசிச பத்திரிகைக்கும் அனுப்பி வைத்துள்ளர் எதற்கு என்று அவரிடமே கேட்டு கொள்ளுங்கள்.

த.மு.மு.க விற்கு : தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் இது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெளிவு படுத்த கடமைபட்டுள்ளார்.

நன்றி

முகவைதமிழன்