Saturday, May 13, 2006

தேர்தல் முடிவுகள் - மகிழ்ச்சியும், வருத்தமும்

பூங்கா நகர் தொகுதியில் ரகுமான் கான் தோற்றிருக்கிறார். இவர் இப்போது அமைச்சர்காளாகியுள்ள உபையதுல்லாஹ், மைதீன் கான் ஆகிய இருவரை விட அமைச்சரவை பொறுப்புக்கு ஏற்றவர். இவர் எம்.எல்.ஏவாகி இருந்தால் சட்டத்துறை அமைச்சர் ஆகி இருப்பார். மருங்காபுரி தொகுதியில் கவிஞர் சல்மா தோற்று இருக்கிறார். இவர் வென்றிருந்தால், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகி இருப்பார். இப்போது அமைச்சர்களாகியுள்ள பெண் எம்.எல்.ஏக்கள், பூங்கோதை, தமிழரசி, கீதா ஜீவன் ஆகியோரை விட கவிஞர் சல்மா அமைச்சராவதற்கு தகுதியானவர். உள்ளாட்சித்துறையில் அனுபவம் பெற்றவர். உள்ளாட்சித்துறை தொடர்பாக பாகிஸ்தானுக்கும் சுற்றுப் பயணம் சென்று வந்தவர். கலைஞர், ரகுமான் கானுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு தரலாம். அல்லது மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கலாம். அல்லது சட்ட மேலவை அமைக்கப் படும் போது இடம் தரலாம். அது போலவே, கவிஞர் சல்மாவுக்கு, கட்சி பொறுப்பு அல்லது ஆட்சியில் வாரியப் பொறுப்பு தரலாம். நான் விரும்பியது போல, குடந்தையில் கோ.சி. மணி வெற்றி பெற்று அமைச்சர் ஆகியுள்ளார். மைலாப்பூரில் நடிகர் நெப்போலியன் தோற்றதற்கு நான் வருத்தப்பட வில்லை. ஆனால், ஆர்.எஸ். எஸ் சிந்தனையுள்ள நடிகர் எஸ்.வி. சேகர் வென்றதற்கு நான் மிகவும் வருத்தப் படுகிறேன்.

7 comments:

சுடர் said...

ரகுமான் கான் தோல்வி வருந்தத்தக்கதுதான். ஆனால் நீங்கள் குறிப்பிடும் சல்மாவிற்கு என்னதான் அனுபவம் இருந்தாலும் அவரது எழுத்துக் கேரக்டரை வைத்து பார்க்கும் போது அவரது தோல்வி சரி என்றே படுகின்றது. அவரது தற்போதைய சிந்தனையோட்டங்கள் எப்படி இருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவித்தால் நலம்.

அவரது இரண்டாம் ஜாமம் பற்றிய நூலுக்கு நாகூர் ரூமி எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். மனம் என்னவோ சல்மாவைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொள்ள மறுக்கிறது.

அபூ முஹம்மத் said...

அவ்வாறு செய்திருந்தால், இவ்வாறு செய்திருந்தால் (அது ஏற்பட்டிருக்குமே! இது ஏற்பட்டிருக்காதே!) எனக் கூறுவது ஷைத்தானின் செயலுக்கு திறவு கோலாகும் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி).
அறிவிப்பாளர்: அபூஹுரைரா - ரலி நூல்: முஸ்லிம்


அன்பின் அருளடியான்,

1) அனுபவம் மட்டுமே தகுதிக்கு உரியனவா? அத்தகையர்களிடம் சமுதாயத்திற்கு எதிர்காலத்தில் தீங்குகள் ஏற்படும் சூழ்நிலையிலுமா?

2) நீங்கள் இந்த தேர்தலில் வெற்றிபெறக்கூடாது என்று நினைத்தவர்களில் மேற்கண்ட அனுபங்களைவிட அதிகம் பெற்றவர்கள் இல்லையா?

அருளடியான் said...

அபூ முஹம்மத் சுட்டிக்காட்டிய ஹதீஸை நாமனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சல்மாவின் உள்ளம் இப்போது திருந்திவிட்டதா இல்லையா என்பது இறைவனுக்குத் தான் தெரியும். அவர் உணமையிலேயே திருந்தியிருந்தால், நாம் அவரைப் புறக்கணிப்பது சரியல்லவே? எந்த மனிதரின் தனிப்பட்ட குறையையும் துருவி ஆராயக் கூடாது என்ற கருத்தில் ஒரு நபிமொழியை நான் படித்துள்ளேன். நீங்களும் படித்திருக்கக் கூடும். அந்த அடிப்படையில் தான் நான் கருத்து தெரிவித்தேன். சல்மாவை மட்டுமல்ல. கலைஞர், ஜெயலலிதா இருவரையும் கூட மிகவும் வன்மையாக எதிர்ப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இருவருமே முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் இருந்து, முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் என்ற நிலையை அடைந்துளார்கள். அவர்களை நம் சமூகத்துக்கு நன்மையாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

ஆத்தூர்வாசி said...

சல்மா மாறிவிட்டார் என்று உம்மால் அறுதியிட்டுக்கூற முடியுமா அருளடியானே!. அல்லாஹ் அறியக்கூடியவன். ஆனால் கடந்த காலம் அப்படி சித்தரிக்கவில்லை. மேலும் அவர் ஒரு அரசியல்வாதி. அவர் நம்பத்தகுந்கவரh.

முகவைத்தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
முகவைத்தமிழன் said...

அன்பின் அருளடியான் , சுடர் , அபூ முஹம்மத் அவர்களே ,

நீங்கள் எதை வைத்து சல்மா திருந்தி விட்டாரா இல்லையா என்று விவாதம் செய்து கொன்டிருக்கின்றீர்கள்?

சல்மா எங்காவது அல்லது எந்த ஊடகங்களின் வாயிலாகவோ தான் திருந்தி விட்டதாகவும் (குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியதற்காகவும் , தான் முஸ்லிமல்ல என்று அறிவித்ததற்காகவும் , தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களின் மானத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்க முயன்றதற்காகவும்) தன்னை மண்ணித்து ஏற்றுக்கொள்ளும்படியும் கோறியுள்ளாரா ?

அப்படி கோரும் பட்சத்தில் நாம் இதைப்பற்றி விவாதிக்கலாம் மற்றபடி அருளடியானின் ஒவ்வொரு கருத்துக்களும் ஒரு முஸ்லிம் "தஸ்லிமா நஸ்ரினுக்கோ அல்லது சல்மான் ருஸ்டிக்கோ ஆதரவளித்தால்" என்ற நிலையிலேயே பார்கப்படும்.

இதை இங்குள்ள சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன். விவாதிப்பதற்கு ஆரோக்கியமான பல விஷயங்கள் உள்ளன. சமுதாய விஷச்செடியை பற்றி மக்களிடம் உணர்த்த வேன்டியிருந்தது அதை நாம் செய்து விட்டோம் இனி அதுபோன்ற பல விஷச்செடிகளை பற்றி அறிவித்து நம் சமுதாயத்தை விழிப்படைய செய்ய வேன்டி உள்ளது , அப்பணிகளை செய்வோம்.

//சல்மா எங்காவது அல்லது எந்த ஊடகங்களின் வாயிலாகவோ தான் திருந்தி விட்டதாகவும் (குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியதற்காகவும் , தான் முஸ்லிமல்ல என்று அறிவித்ததற்காகவும் , துமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களின் மானத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்க முயன்றதற்காகவும்) தன்னை மண்ணித்து ஏற்றுக்கொள்ளும்படியும் கோறியுள்ளாரா ? //

ஆகவே வேன்டாத விவாதங்கள் இங்கு வேன்டாம் நாம் வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு நமது நேரத்தை செலவளிக்கலாம். நமது முஸ்லிம் இயக்கங்கள் மூலம் ஆள்வோருக்கு கோரிக்கை வைத்து இட ஒதுக்கீட்டையும் , நீன்டகலமாக சிறையில் வாடி வரும் நம் முஸ்லிம் சகோதரர்களின் விடுதலையையும் துரிதப்படுத்த செய்யலாம்.இறைவன் நாடினால்.

நன்றி

samudayanalavirumpi said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நண்பர் சுடர் கூறியதுபோன்று சல்மா அவர்கள் தோற்றது சரியென்றே படுகிறது ஏனெனில் முஸ்லிமல்லாத சகோதர-சகோதரரிகள் விமர்சித்தால் முஸ்லிம்களை மாத்திரம் விமர்சிப்பார்கள் ஆனால் பெயர்தாங்கி முஸ்லிம் சகோதர-சகோதரரிகள் விமர்சித்தால் முஸ்லிம்களை மட்டுமல்லாது இஸ்லாத்தையும் சேர்ந்து விமர்சிப்பார்கள் என்பது என் கருத்து

அதேவேளையில் சல்மாவை போன்றே பதர் சயீது அவர்களும் இஸ்லாத்தின் பேரிலும் முஸ்லிம்களின் பேரிலும் நச்சுக் கருத்துக்கள் இருக்குமேயானால் பதர் சயீதையம் சல்மாவின் பட்டியலில் சேர்க்க தயங்கக்கூடாது.
சமுதாயநலவிரும்பி