Thursday, April 27, 2006

கற்பனை செய்யுங்கள் ஒர் உலகம்!


கற்பனை செய்யுங்கள் ஒர் உலகம்! ஓர் உலகம் பி.ஜெ இல்லாமல். ஜவாஹிருல்லாஹ் இல்லாமல். ஓர் உலகம் த.மு.மு.க இல்லாமல். தவ்ஹீத் ஜமாஅத் இல்லாமல். ஹைதர் அலி இல்லை. பாக்கர் இல்லை. முஸ்லிம் லீக் இல்லை. தேசிய லீக் இல்லை. எவ்வளவு இனிமையாக இருக்கும். கற்பனை செய்யுங்கள்.

4 comments:

Unknown said...

அல்லாஹ் தமிழகத்தில் தவ்ஹீத் ஊற்றெடுக்க பீ.ஜே என்ற நபரை அதிகமாகப் பயன்படுத்தினான். அதுபோலவே தமிழக முஸ்லீம்களும் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடி வெற்றி பெற முடியும் என்பதைச் சொல்லித் தருவதற்காக ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலிகளைப் பயன்படுத்தினான்.

அதனால் போட்டி மனப்பான்மையற்ற, 'ஈகோ'களற்ற, சிறு சிறு சச்சரவுகளிலேயே சுருண்டு விடாத, தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்திருக்கின்ற, யாருக்கும் எதற்கும் விலை போகாத புதிய பீ.ஜேக்களும், ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ், பாக்கர்கள் தேவை.

இன்ஷா அல்லாஹ் இத்தகைய புதிய தலைவர்கள் கிடைக்கப் பெற்றால் மீண்டும் தமிழக முஸ்லீம்களால் தலை நிமிரலாம்.

அபூ முஹம்மத் said...

சகோ. சுல்தான் அவர்களின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

அன்புடன்
அபூ முஹம்மத்

Anonymous said...

//ஓர் உலகம் பி.ஜெ இல்லாமல். ஜவாஹிருல்லாஹ் இல்லாமல். ஓர் உலகம் த.மு.மு.க இல்லாமல். தவ்ஹீத் ஜமாஅத் இல்லாமல்//

இது இவர்களுடைய சமுதாயப் பணியை குறிப்பிடுவதாக இருந்தால், எண்ணற்ற சகோதரர்கள் இன்னும் ஷிர்க்கில் இருந்து கொண்டிருப்பார்கள். மார்க்கம் என்ற பெயரில் வயிறு வளர்க்கும் மௌவிகளின் எண்ணிக்கை சற்று தூக்கலாக இருந்திருக்கும். இஸ்லாத்தின் பெயரை கொச்சைப் படுத்தும் ஹிந்து அமைப்புக்களின் மேடைப் பிரச்சாரம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்.

புனிதப் போராளி பழனி பாபா சொன்னது போல் காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு குறவன் வந்தாலும் அவனை போலிஸ்காரன் என்று நினைத்துக் பயந்து ஓடும் சமுதாயமாக முஸ்லிம்கள் இருந்திருப்பார்கள்.

சமுதாயத்திற்காக இரவு, பகல் பாராமல் களத்தில் நின்று உழைத்த சகோதரர்களை ஏ.சி அறையில் இருந்து கொண்டு கேலி செய்யும் அருளடியான் போன்றவர்கள் இல்லாமல் இருக்கும் ஓர் உலகத்தை கற்பனை செய்வோம்.

அருளடியான் said...

என்னைப் பற்றிய விமர்சனத்தைப் பற்றி நான் கவலைப் படவில்லை. குறவனுக்கும் போலீஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழ் முஸ்லிம் சமுதாயம் இருப்பதாக இவர் கூறுவது உண்மையில்லை. பொது அரசியல்வாதிகள் முதல் முஸ்லிம் அரசியல் வாதிகள் வரை யாரும் முஸ்லிம் பொது மக்களின் விமர்சனத்தில் இருந்து தப்பமுடியாது. இனி தமிழ் முஸ்லிம்கள் பா.ம.கட்சியனரைப் போன்றோ அல்லது அ.இ.அ.தி.மு.கவினரைப் போன்றோ எந்த தலைவரையும் கண்மூடி புகழ் பாட மாட்டார்கள். அது இருக்கட்டும். நான் தான் ஏசி அறையில் இருந்து எழுதுகிறேன். கோவை சிறையில் இருந்து எழுதிய என் சக முஸ்லிம் சகோதரன், இவ்விரு முஸ்லிம் அமைப்புகளையும் தோலுரித்து அம்பலபடுத்தியது உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் அக்கடிதத்தின் நகல் எங்கு கிடைக்கும் எனத் தேடி படியுங்கள்.