Thursday, April 13, 2006

த.த.ஜ.வினரை அதன் தலைமை கண்டிக்குமா?

பொய்களை பரப்பும் த.த.ஜ.வினரை அதன் தலைமை கண்டிக்குமா?

கடந்த 06-ந் தேதி (ஏப்ரல் 2006) ஜித்தாவில் சகோதரர் பாக்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட புரோக்ராம் பற்றி நிகழ்ச்சி தொகுப்பாக தீன் முஹம்மது என்ற சகோதரர் எழுதியிருந்தார். அக்கடிதம் நிகழ்ச்சிக்கு மறுநாளே மின்னஞ்சலின் எனக்கு வந்தது. அதில் கீழ்கண்ட வாகசகங்களைப் படித்ததும் ஆச்சர்யத்தை உண்டாக்கிவிட்டது.

இடையில் ஜித்தாவில் அழைப்புப்பணி மையத்தில் பணிபுரியும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில மணித்துளிகளில் சென்று விட்டார்.

சகோதரர் முஜிபுர்ரஹ்மான் நிகழ்ச்சிக்கு வந்து சில மணித்துளிகளில் சென்றுவிட்டார். ஆனால், அவர் மேடையில் உட்காரவில்லை.

அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது.

கேமரா மின்னியது என்றால், முஜிபுர்ரஹ்மான் மேடையில் அமர்ந்த புகைப்படைத்தை சகோதரர்கள் காட்டுவார்களா?

மேடையில் அமராததால் அவரும் சொற்பொழிவாற்றுவார் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர்.

முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் மேடையில்தான் வந்தமர்ந்தார் என்று சாட்சியம் கூறுவதுபோல், 'அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர்' என்ற இவர்களின் வாசகம் அமைந்துள்ளது.

هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?

تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
(குர்ஆன் 26:221-222)


என்ற இறைவசனங்களை ஞாபகமூட்ட வேண்டிய தவ்ஹீது சகோதரர்கள் ஒரு பொய்யை சொல்லி அதன்மீது இன்னொரு பொய்யை தடவுவது எந்த வகையில் சரி என்பதை விளக்குவார்களா?

இதுபோன்ற பொய்களை பரப்பக்கூடிய சகோதரர்களை த.த.ஜாவின் தலைமை கண்டிக்குமா?

பாக்கர் கலந்துக்கொள்ள இருக்கும் ரியாத் மாநகர இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு மின்னஞ்சல் வழியே மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்த தீன் முஹம்மது என்ற இந்த த.த.ஜா சகோதரருக்கு அந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றக்கூடிய அறிஞர்கள், இஸ்லாத்தில் பொய் சொல்பவருக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய தண்டனையைப்பற்றி இறைவனின் வசனத்தைக்கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்களா?

குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட நம்மவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் எதிரணியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பலர் இன்னும் சென்று வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒரு உண்மையை வைத்து சில பொய்களை புனைந்துரைக்கும் த.த.ஜ. சகோதரர்களின் இத்தகைய செயல்பாட்டால் இவர்களின் நிகழ்ச்சிக்கு மற்றவர்கள் வருவதற்கு அஞ்சக்கூடிய நிலையை இவர்களே ஏற்படுத்தி தருகிறார்கள் என்பதை த.த.ஜ. தலைமை நிர்வாகிகள் உணர்வார்களா?

பொய்களை எழுதக்கூடிய தீன்முஹம்மது போன்றவர்களை நம்பி அந்த பொய்யை மின்னஞ்சலின் வழியே பரப்பும் த.த.ஜா.வின் பிற சகோதரர்கள் உண்மையை அடையாளம் கண்டு தீன் முஹம்மது போன்ற பொய்யர்களை தனிமைப்படுத்துவார்களா?

அன்புடன்
அபூ முஹம்மத்

10 comments:

அபூ ஷைமா said...

தவறைத் தவறென சுட்டிக்காட்டும் சரியான கடமைக்குப் பாராட்டுக்கள் சகோ அபூ முஹம்மத். இந்த இடுகையின் படியை உங்களுக்கு மடல் அனுப்பி வைத்த சகோதரருக்கும், ஜித்தா ததஜ கிளை நிர்வாகிகளுக்கும், ததஜ தலைமை நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைத்து விடுங்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.

முகவைத்தமிழன் said...

இதை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் இரு புணிதப்பள்ளிகளின் தளத்தின் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்து விட்டேன் . நேற்று இரவு கிழக்கு பிராந்திய நிர்வாகிகளிடம் இது குறித்து நடத்திய விவாதத்தில் தெளிவான பதிலை அவர்கள் அளிப்பதாக தெறியவில்லை. லகும் தீனுக்கும் வலியத்தீன் என்று மீன்டும் குர்ஆனை அவர்களுக்கு தோதாக திரிக்கும் விதத்திலேயே பேசுகின்றார்கள். இவ்வமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் இம்மண்னிலேயே இருக்கின்றார் அவரும் இந்த செய்திகளையும் பதிவுகளையும் உற்று கவனித்து வருவதாக தகவல்! அவராவது ஒரு தெளிவான பதிலை தருவாரா ?? எதிர்நோக்குவோம். - முகவைத்தமிழன்.

அபூ முஹம்மத் said...

அன்பின் முகவைத் தமிழன்,

//இதை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் இரு புணிதப்பள்ளிகளின் தளத்தின் நிர்வாகிகளுக்கு//

இதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை.

பொதுவாக சீரியசான மேட்டர்களை விவாதிக்கும்போது விளையாட்டான வார்த்தைகள் பரிமாறப்பட்டால், நமது கேள்வியை திசை திருப்பும் பொருட்டு விளையாட்டாக எழுதப்பட்ட வார்த்தைகளை பிடித்துக்கொண்டு அதற்கு பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்து கட்டுரையின் மைய கருத்தை திசை திருப்பிவிட வாய்ப்பு ஏற்படுத்தி தந்துவிட வேண்டாம் என்பதே எனது நோக்கம்.

இந்த பதிவில் என்னுடைய கேள்வி ஒன்று மட்டும்தான்.

இந்த நிகழ்ச்சியில் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் இவர்களுடன் மேடையில் அமர்ந்த புகைப்படத்தை காட்டி இவர்கள் உண்மையாளர்கள் என்று நிரூபிக்க வேண்டும். வேறு எந்த விளக்கமும் நமக்கு தேவையில்லை.

மேரா மின்னியது என்பதால் இவர்களுக்கு ஆதாரம் எளிதாக கிடைத்துவிடும்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். த.த.ஜ.வின் மின்னஞ்சல் படை, பொய்யர்களா? அல்லது உண்மையாளர்களா? என்பதை இதன்மூலம் நிரூபிக்க நல்ல சந்தர்ப்பம்.

தீன் முஹம்மது போன்ற பொய்யர் பட்டாளங்களை வைத்துக்கொண்டு இணையத்தில் தன்னை எதிர்ப்பவர்களை நாயைவிட்டுக் கடிக்கும் முறைபோன்ற ஒரு வகையை தனக்கு சம்பந்தமில்லாததுபோல் த.த.ஜ. ஏற்பாடு செய்துவைத்துள்ளது என்பது இவர்கள் மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு.

தீன்முஹம்மது போன்ற பொய்யர்களை த.த.ஜ.வின் தலைமை பொதுவில் கண்டிக்க முன்வரவில்லையென்றால் த.த.ஜ. தலைமை மேல் உள்ள குற்றச்சாட்டு உண்மைப்படுத்தப்படும் என்பதை இவர்கள் உணர வேண்டும்.

வாசகன் said...

தீன் முஹம்மது என்ற அந்த பொய் பரப்பும் எழுத்தாளரை கண்டித்தால், த.த.ஜ. சார்பாக உள்ள மின்னஞ்சல் படையை கேவலப்படுத்தியதாக ஆகிவிடும்.

அப்படி கண்டிக்காவிட்டால், த.த.ஜ.வின் நிழற்படைதான் அந்த பொய் பரப்பும் கும்பல் என்று ஒத்துக்கொண்டதாக ஆகிவிடும்.

மொத்தத்தில் த.த.ஜ. வுக்கு செக்!

Anonymous said...

அன்பின் அபூ முஹம்மத்

நாம் விரும்பாமலே மின்னஞ்சல் வழியாக பல தகவல்களை தரக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் எது உண்மை எது பொய் என்பதை அறிந்து முடிவு எடுப்பதில் மிகவும் சிரமமும் ஏற்பட்டு விடுகிறது. தங்களுடைய பதிவில் கேட்டிருக்கும் கேள்வி மிகவும் நியாயமானதும், மிகவும் நடுநிலையானதுமாக இருக்கிறது.

மேடைக்கு வந்து அமராத ஒருவரை அமர்ந்ததாக குறிப்பிட்டு தவறான செய்தி பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. அப்படி செய்தி தந்த தீன் முஹம்மதிற்கு கண்டனம் தெரிவிப்பது ஒரு ஆரோக்கியமான செயல்.

அதுபோலவே த.மு.மு.க.வை சேர்ந்த இளையவன் என்ற ஒருவர் சகோதரர் பாக்கர் அவர்களின் நிகழ்ச்சியை வர்ணனை செய்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவரும் தீன் முஹம்மதிற்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற தோரனையில் செய்தி அனுப்பியிருக்கிறார். எந்த அமைப்பையும் சார்ந்திராமல் மிகவும் நடுநிலையாக இருக்கக்கூடியவர்கள் அவருடைய பொய்யையும் கண்டிக்க தவறி விடக்கூடாது.

எப்படி போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள்..

போட்டி எண் : 1

//ஒரு சில மாதங்களுக்கு முன்பே வரவிருந்த ததஜ பொதுச்செயலாளரின் வருகை திடீரென ரத்துச் செய்யப்பட்டது. காரணம் அந்த நேரத்தில்தான் விண் டீவியும், கோடிகளும் கைமாறும் படலம் நடந்தது. அந்த பெரும் தொகையை சரியான இடத்தில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் மும்முரமாக இருந்ததால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது//

ஒரு செய்தியை தருபவர் அதை ஆதாரங்களின் அடிப்படையில் தர வேண்டும். இளையவனின் இந்த செய்திக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இவர்களுடைய பொய்களுக்கு ஆதாரம் கேட்டால் இந்த மின்னஞ்சல் வீரர்கள் வந்த வழி தெரியாமல் மறைந்து விடுகிறார்கள்.

போட்டி எண் : 2

//பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல, அவரது கிண்டலைப் புரிந்துக் கொள்ளாமல் பாக்கர் உடனே என்னை சிங்கம், புலி என்று சொல்லாதீங்க என்று கூறி அதைவிட பயங்கரமாக தனது முழு கைச் சட்டையை சண்டைக்கு போவது போல நன்றாக முழங்கை வரை மடக்கி வைத்துக் கொண்டு அவர் பாணி(!)யில் சினிமா நடிகர் நடிகை மற்றும் நவீன அரசியல் வாதிகளை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என்று கர்ஜிக்க ஆரம்பித்தார்//

சகோதரர் பாக்கர் அவர்கள் கலந்து கொண்ட ஜித்தா நிகழ்ச்சியில் அவர் உம்ரா முடித்து மொட்டையுடன் கலந்து கொண்டார். அப்படியிருக்க..

//அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல//

என்று வர்ணித்திருப்பது சிறப்பான பொய்யர்களின் போட்டியாகவே கருத முடிகிறது.

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகறா 42) என்ற திருமறை வசனத்தை இவர்களுக்கு நினைவூட்ட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அபூ முஹம்மத் said...

மேற்கண்ட எனது பதிவிற்கு பதிலாக கீழ்கண்டவாறு தீன் முஹம்மது என்ற அந்த நபர் எழுதியுள்ளார்.

//நாம் என்னவோ, ஹைதர்அலி சைட் அடித்தார், ஜவாஹிருல்லாஹ் லாட்ஜில் விபச்சாரம் செய்தார் என்று எழுதியதைப் போல் தீன் முஹம்மதை ததஜ கண்டிக்காதா? ஆஹா....இது எந்தவகையான அரிப்போ?????

வந்தார் அமர்ந்தார் சென்றார் என்பதற்காக ததஜ கண்டிக்காதா? என ஃபித்னா பரப்பும் கொடியவர்களுக்கு அரிப்பெடுப்பதில் என்ன நியாயமோ அவர்களின் தலைமைக்கே வெளிச்சம்.
//

ஒரு மனிதனின் நடை உடை பாவனைகள்தான் அவனைப்பற்றி வெளிப்படுத்துகின்றன.

இது எந்தவகையான அரிப்போ????? என்று எழுதும் இவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள இது ஒன்றே போதுமானது.

தீன் முஹம்மது போன்ற பொய்யர் பட்டாளங்களை வைத்துக்கொண்டு இணையத்தில் தன்னை எதிர்ப்பவர்களை நாயைவிட்டுக் கடிக்கும் முறைபோன்ற ஒரு வகையை தனக்கு சம்பந்தமில்லாததுபோல் த.த.ஜ. ஏற்பாடு செய்துவைத்துள்ளது என்பது இவர்கள் மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு என்று எழுதியிருந்தேன்.

அது அப்படியல்ல இன்னும் பரிணாமம் அடைந்து விபச்சாரியாக மாறியிருக்கிறது என்று சொல்ல வருகிறாரா இந்த தீன் முஹம்மது?

//நாம் என்னவோ, ஹைதர்அலி சைட் அடித்தார், ஜவாஹிருல்லாஹ் லாட்ஜில் விபச்சாரம் செய்தார் என்று எழுதியதைப் போல் தீன் முஹம்மதை ததஜ கண்டிக்காதா?//

திருடனுக்கு தேள் கொட்டியதைப் போன்று ஏன் இவ்வாறு சம்பந்தமில்லாமல் உளறுகிறார்?

//வந்தார் அமர்ந்தார் சென்றார் என்பதற்காக ததஜ கண்டிக்காதா? என ஃபித்னா பரப்பும் கொடியவர்களுக்கு அரிப்பெடுப்பதில் என்ன நியாயமோ//

பொய் பரப்பியதை தட்டிக்கேட்டது இந்த மனிதரின் பாஷையில் ஃபித்னா என்றால், இவரைப் போன்று மெகா பொய்களை இணையத்தில் பரப்புவதற்கு என்ன பெயர் என்று சொல்வாரா?

//வந்தார் அமர்ந்தார் சென்றார் என்பதற்காக ததஜ கண்டிக்காதா? என ஃபித்னா பரப்பும் கொடியவர்களுக்கு அரிப்பெடுப்பதில் என்ன நியாயமோ//

பொய்யருக்கு பொய் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கு முடியும் என்பதற்கிணங்க. வந்தார் அமர்ந்தர் சென்றார் என்று எழுதியதாக புரட்டுகிறார். ஆனால் இவர் எழுதியது,

இடையில் ஜித்தாவில் அழைப்புப்பணி மையத்தில் பணிபுரியும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில மணித்துளிகளில் சென்று விட்டார்.

இவர்களின் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக இவர்களின் நிகழ்ச்சிக்கு செல்லும் ஆலிம்கள் பின்வரும் வரிகளை படித்து இவர்கள் கொடுக்கும் மரியாதை என்னவென்று தெரிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தில் பணிபுரிந்து வரும் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ததஜவுடன் பல கருத்துவேறுபாடுகளை அன்னார் கொண்டிருந்தாலும், ஜித்தாவில் நடந்த கூட்டத்திற்கு மரியாதை நிமித்தமாக வந்திருந்தார்;. அவர் மேடைக்கு வந்து பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கருத்து வேறுபாட்டைக் காட்டுவதற்காக போஸ் கொடுத்து விட்டு போவார் என்று எதிர்பார்க்கவில்லை.

மரியாதை நிமித்தமாக பொய் சொல்பவர்களை யாராவது பார்த்திருக்காவிட்டால், இந்த தீன் முஹம்மதுவை பார்த்துக்கொள்ளுங்கள்.

முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அமராதது உண்மையே! கடந்த மாதங்களில் இளையவன் அண்ட் கோவின் அமைப்பான தமுமுக, முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ரோபார்ட்டாக நடத்தி வந்தாலும், நான் அவர்மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாக, வந்தார் அமர்ந்தார் கேமரா மின்னியது சென்றார். என்று எழுதிவிட்டேன்.

இந்த மனிதர் மரியாதை நிமித்தமாக பொய்யை சொன்னேன் என்று நா கூசாமல் பேசுகிறார். அப்படி மரியாதை நிமித்தமாக இந்த பொய்யை சொல்லியிருந்தால், பி.ஜே.வின் மீதுள்ள இவர்களின் மிகப்பெரிய மரியாதை எப்படியெல்லாம் இவரை பொய்யாக எழுதச் சொல்லியிருந்திருக்கும் என்று இதனை படிக்கும் சகோதரர்கள் சிந்தித்து புரிந்துக்கொள்ள வேண்டும்.

தீன் முஹம்மது என்ற இந்த மனிதர் எழுதிய பொய்யை சகோ. பாக்கர் அவர்களிடம் சில சகோதரர்கள் நேரடியாக எத்தி வைத்ததற்கு, தனக்கு தீன் முஹம்மது என்றால் யார் என்று தெரியாது எனவும் அதற்கான மறுப்பை தனது இயக்கத்தின் இணையதளத்தில் வெளியிடுவதாகவும் சொன்னாராம். சகோ. பாக்கரை யாராவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தீன் முஹம்மது என்ற பொய்யரைப் பற்றியும் அவர் ரியாத்தில்தான் இருக்கிறார் என்பது பற்றியும், அவர் லேட்டஸ்ட்டாக எழுதிய விபச்சார ஸ்டைல் மடல் பற்றியும் எத்திவையுங்கள்.

ஆனால், இதுவரை எந்த மறுப்பும், த.த.ஜ. தலைமையின் சார்பாக வெளியிடப்படவில்லை.

த.த.ஜ. ஒரு தூய்மையான கொள்கையாளர்களை தன்னகத்தே கொண்ட இயக்கம் என்றால், அது தீன் முஹம்மது என்ற பொய் பரப்பு மனிதரை கண்டித்திருக்க வேண்டும். த.த.ஜ. என்ற தூய இயக்கத்துக்கு லாயக்கில்லை என்று வெளியே தள்ளி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. காத்திருக்கிறோம்.

தன்னைத் தட்டிக்கேட்பவர்களை எதிரணியில் சேர்த்து எளிதாக தப்பித்துவிடலாம் என்று இந்த தீன் முஹம்மது என்ற மகா பொய்யர் கனவு காண்கிறார்.

உம்ரா செய்து மொட்டை போட்டுக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சகோ. பாக்கர் அவர்களைப் பற்றி,

//பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல, அவரது கிண்டலைப் புரிந்துக் கொள்ளாமல் பாக்கர் உடனே என்னை சிங்கம், புலி என்று சொல்லாதீங்க என்று கூறி அதைவிட பயங்கரமாக தனது முழு கைச் சட்டையை சண்டைக்கு போவது போல நன்றாக முழங்கை வரை மடக்கி வைத்துக் கொண்டு அவர் பாணி(!)யில் சினிமா நடிகர் நடிகை மற்றும் நவீன அரசியல் வாதிகளை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என்று கர்ஜிக்க ஆரம்பித்தார்// என்று இளையவன் என்பவர் எழுதியிருப்பதாக சகோதரர் ஒருவர் இங்கு மறுமொழியிட்டுள்ளார்.

போட்டி போட்டுக்கொண்டு பொய் சொல்லும் இவர்கள் திருந்தவேண்டும் என்பதே நமது ஆவல்.

அபூ ஷைமா said...

சகோ அபூ முஹம்மத்,

//போட்டி போட்டுக்கொண்டு பொய் சொல்லும் இவர்கள் திருந்தவேண்டும் என்பதே நமது ஆவல். //

எல்லோருடைய ஆவலும் அதுவே. தங்களின் இடுகையில் இருந்த நிதானம் தங்களின் மறு மொழியில் இல்லை என்பது எனது கருத்து. நிதானம் இன்றி ஒரு சார்பு நிலையோடு இட்ட கருத்துக்கள் தங்களின் அக்கறையை நீர்த்துப் போக விட்டு விடுமோ என அஞ்சுகிறேன். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.

அபூ முஹம்மத் said...

அன்பின் அபூ ஷைமா,
இஸ்லாமிய அடிப்படையிலும் நிதானமாகவும் எழுதிய பின்னரும் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல், என்ன அரிப்போ என்று தீன் முஹம்மது எழுதியது என்னை பாதித்து அது என் மறுமொழியில் வெளிப்பட்டிருக்கலாம். எனது தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அதற்காக வருந்துகிறேன்.

இயக்க வெறியின் காரணமாக இணையத்தில் பொய்களை அவிழ்த்துவிடுவதில் தீன் முஹம்மது போன்றே இளையவனும் ஒரு பொய்யரே. அப்படி அவர் பொய்யர் இல்லையென்றால், சகோ. பாக்கர் அவர்களைப்பற்றி தவறாக விமர்சனம் செய்தற்காக மன்னிப்பு கேட்டிருப்பார்.

முதலில் நமக்கு இந்த இயக்கங்கள் பற்றிய சரியான புரிதல்கள் வேண்டும். த.த.ஜ. என்னும் அமைப்பு இஸ்லாத்தை மக்களிடத்தில் பரப்பும் ஒரு மாபெரும் இயக்கமாக தமிழ்நாட்டில் பிரகடப்படுத்திக்கொண்டார்கள். த.மு.மு.க. இஸ்லாத்தை மக்களிடத்தில் சொல்வதற்காக உருவாக்கப்பட்டதல்ல. உரிமைகளை கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.

த.மு.மு.க.வில் சகோ. பி.ஜே அவர்கள் இருக்கும்போது இதனை பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது த.மு.மு.க.வில் குடிகாரன் இருப்பான், சூதாடுபவன் இருப்பான் என்று பல இவன்களை பட்டியல் போட்டு இது உரிமைகளை கேட்பதற்காக உள்ள இயக்கம் என்று சொல்லியிருக்கிறார். அப்படி எல்லாரும் இருப்பதை பலர் ஏற்றுக்கொள்ளாதபோது அதனை நியாயப்படுத்தி ஆட்சியாளருக்கு மக்களை கூட்டி வீதியில் இறங்கி போராட்டம் செய்யும் இயக்கமே த.மு.மு.க. என்று சமாதானப்படுத்தியதும் சகோதரர் பீ.ஜே.தான்.

அதனால்தான் சொல்கிறேன், இஸ்லாத்தை சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் உரிமை கேட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்துடன் ஒப்பீடு செய்துக்கொள்வது அழகல்ல. தவறு என்னவென்பதை குர்ஆன் ஹதீஸுடன் ஒத்துப்பார்த்து திருந்திக்கொள்ளாமல் இளையவன் திருந்தினால்தான் தாங்கள் திருந்துவோம் என்று சொல்வது நியாயமும் இல்லை.

நேரம் கிடைத்தால் இயக்க வெறியினால் அழைப்புப் பணிக்கு வந்த பின்தங்கிய நிலையைப்பற்றி பிறகு எழுதுவேன், இன்ஷா அல்லாஹ்.

அன்பின் தமிழ்முஸ்லிம் மன்ற உறுப்பினர்களுக்கு,
பொதுவாக ஒரு இயக்கத்தினரின் தவறை தட்டிக்கேட்டால் செய்தியை வெளிக்கொணர்ந்த ஊடகத்தை தாக்கி எழுதுவது புதிதல்ல. அந்த வகையில் இந்த மன்றத்தை தாக்கி பிறர் எழுதுயதற்கு நான் காரணம் என்று உறுப்பினர்கள் கருதினால், அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

வஹ்ஹாபி said...

இது போன்ற பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பின்னூட்டமிடுவது நல்லதல்ல.

போட்டியிடுவது இரண்டு கழகங்கள்; அடித்துக் கொள்வது இரண்டு அணிகள்.

மின்னஞ்சலிலும் வலைத்தளங்களிலும் வலைப்பூக்களிலும் சேறடிப்பது நான்குபேர்.

இதிலிருந்தே விளங்கவில்லையா இரு அணிகளைப் பற்றியும் பெரும்பாலான முஸ்லிம்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லையென்று?

எதிர்ப்பதற்கும் எழுதுவதற்கும் எவ்வளவோ இருக்க, இவர்கள் தங்கள் இலக்குகளை அறிந்து கொள்ளாமல், "எவ்வளவு கூட்டம் பாத்தியா?" என்றும் "கூட்டமேயில்லை; இருக்கைகள் காலி; ஈ ஓட்டுகிறார்கள்" என்ற கருப்பொருளிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

குரங்கு கையில் பூமாலையாய் இவர்கள் கைகளில் வலைவசதி!

எனது வேண்டுகோள் என்னவெனில்,

முதல் பாராவை மீண்டும் படித்துக் கொள்க!

சமுத்திரம் said...

முஜிபுர்ரஹ்மான் உமரி த.த.ஜவின் ஜித்தா நிகழ்ச்சியின் மேடையில் அமரவில்லை என்று மறுப்பு தெரிவித்து அதை ஒரு இமாலய தவறாக சித்தரித்து தீன் முஹம்மத் என்ற சகோதரருக்கு கண்டனம் தெரிவித்த கனவான்களே நீங்கள் குறிப்பிட்ட அதே நிகழ்ச்சியை இளையவன் என்றொருவர் செய்தியாக எல்லோருக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாரே அதில் பொய்க்கு பிறந்தது பூனையாகுமா என்று ஜவாஹிருல்லாவை மிஞ்சும் வண்ணம் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டியிருந்தாரே அதை நீங்கள் கண்டிக்காதது ஏனோ?

பொய்களை பரப்பும் இளையவனை த.மு.மு.க கண்டிக்குமா என்று கட்டுரை வடிக்காதது ஏனோ?

த.மு.மு.க ஒரு அரசியல் கட்சி, அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பொய் சொல்வார்கள் என்று சொல்வது அவர்களை மேலும், மேலும் பொய் சொல்ல அல்லவா உற்சாக மூட்டும். த.த.ஜ.வாகட்டும், த.மு.மு.க.வாகட்டும் இன்னும் எந்த அமைப்பில் யார் இருந்தாலும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். இப்படி அறிவுறுத்துவதுதானே சிறந்த சமுதாய தொண்டாக இருக்க முடியும்.

பொய்களை பரப்புபவர்களையும், அதற்காக ஒரு தலைபட்சமாக வக்காலத்து வாங்குபவர்களையும் அந்த அல்லாஹ் கவனித்து கொண்டிருக்கிறான். எல்லோரும் அந்த ஏக இறைவனுக்கு அஞ்சியவர்களாக தங்களுடைய செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் த.மு.மு.க.வாக இருந்தாலும் சரி, த.த.ஜ.வாக இருந்தாலும் சரி.