பா.ம.க., போட்டியிடும் 31 தொகுதிகளை புறக்கணிப்போம்: த.மு.மு.க., அறிவிப்பு
தஞ்சாவூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தமீம் அன்சாரி தஞ்சாவூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். எட்டு ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
பா.ம.க., போட்டியிடும் 31 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட சிறுபான்மை இன வேட்பாளரை நிறுத்தவில்லை. சிறுபான்மை இனத்துக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்கிறது. வரும் 13ம் தேதிக்குள் சிறுபான்மை இனத்தவருக்கு வாய்ப்பளிக்காவிட்டால் பா.ம.க., போட்டியிடும் 31 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம்.
இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்ததுக்கு வருத்தம் தெரிவித்தார். பா.ம.க., ராமதாஸிடம் தெரிவித்தோம். அவர் மாநில தலைவரிடம் பேசினார். அப்போது எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம். 13ம் தேதி வரை கெடு விதித்துள்ளோம்.
பூம்புகார், திருவிடைமருதூர், பண்ருட்டி, புவனகிரி இவற்றில் ஒரு தொகுதியிலாவது சிறுபான்மை இன வேட்பாளரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
தி.மு.க.,வில் ஐந்து பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருப்தியில்லா விட்டாலும், பரவாயில்லை. காங்கிரஸ் ஒரே ஒரு வேட்பாளருக்கு வாய்ப்பளித்துள்ளது. அதனால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளோம். இதுகுறித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Courtesy: http://www.dinamalar.com
Sunday, April 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பா.ம.க வேட்பாளர்களை புறக்கணிக்க த.மு.மு.க எடுத்த முடிவு மிகச் சரியானது. வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை விட நம்பிக்கை குறைவானவர். அவர் முஸ்லிம்களின் நண்பராக நடிப்பது வாக்கு வங்கி அரசியலே. டாக்டர் ராமதாஸ் கூட்டத்தினர், தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன் முஸ்லிம்களுக்கு விரோதமாகவே இருந்தனர். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரான ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது ஸாஹிபுக்கு எதிராக தங்கள் சாதியைச் சேர்ந்த தி.மு.க வேட்பாளருக்கு வாக்களித்தனர் பா.ம.க தொண்டர்கள். இதற்கு டாக்டர் ராமதாஸின் நேரடி வாய்மொழி உத்திரவே காரணம். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமல்ல. தமிழ் நாட்டின் நலனுக்கும் பா.ம.க புறக்கணிக்கப் பட வேண்டிய சக்தியே. ஒடுக்கப் பட்ட சாதியினரின் நலனுக்கான அமைப்பு என்ற அடிப்படையில் நாம் அதனை ஆதரித்தோம். அதுவே, ஒரு குடும்ப நலனுக்காகவும், ஆதிக்கச் சக்தியாகவும் மாறும் போது அதனை புறக்கணிப்போம். சரியான முடிவை எடுத்ததற்காக த.மு.மு.க மாநிலச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரிக்கு என் கைகுலுக்கலைத் தெரிவிக்கிறேன்.
Post a Comment