Monday, April 10, 2006

மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி -Jeddah

'சுவனப்பாதை'-மாத இதழ் நடத்தும்
மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி!

பரிசு விபரங்கள்!
முதல் பரிசு
SR.500 மதிப்புள்ள மொபைல் ஃபோன்

இரண்டாம் பரிசு
SR.300 மதிப்புள்ள மொபைல் ஃபோன்

மூன்றாம் பரிசு
ஸஹீஹுல் புகாரி ஒன்று முதல் ஏழு பாகங்கள்

மற்றும்
ஆறுதல் பரிசுகள் : பத்து நபர்களுக்கு

விதிமுறைகள்
1. கட்டுரைகள் 3மூன்று முதல் ஐந்து பக்கத்திற்குள் எழுதப்பட்டிருக்கவேண்டும்
2. தட்டச்சு செய்யப்பட்டிருந்தால் கட்டுரையும், எழுத்துருவும் (Font) ஒரு ஃபிளாப்பியில் சேமிக்கப்பட்டு பிரிண்ட் செய்யப்பட்ட கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். கட்டுரை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. சொந்தமான ஆக்கங்கள் தவிர்த்து வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
4. மூலப்பிரதி மட்டுமே போடிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். கட்டுரைகள் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது.
5. புரட்சிகரமான கருத்துகள், புதுவிதமான அணுகு முறைகள், மார்க்கத்திற்கு முரண் இல்லாமை மற்றும் ஆதாரங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் அளிக்கப்படும்
6. கட்டுரையை மூடிய உறையிலிட்டு, பெயர் மற்றும் புனைப்பெயர் ஆகிய விபரங்கள் உறையில் மட்டும் எழுதி அனுப்பவேண்டும். கட்டுரைத்தாளில் பெயர் குறிப்பிடக்கூடாது
7. வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்
8. கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்:
(1) இஸ்லாமிய அழைப்பகம் (2)ஸனாய்யியா, துறைமுக நூலகம் - துறைமுகம் (3) அல்ஹுதா நூலகம் - பலத் (Jeddah)
9. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்:
பிறை 30 ரபிவுல் அவ்வல் 1427 (ஏப்ரல் 28, 2006)

10. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு உரிமை உண்டு).
11. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.
12. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கலந்துககொள்ள அனுமதி இல்லை.
13. ஒருவர் ஒரு தலைப்பின் கீழ் மாத்திரம் கட்டுரை எழுதமுடியும் மற்றும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு மற்றவருக்கு வழங்கப்பட மாட்டாது.
14. கட்டுரை எழுத விரும்புவோர் தலைப்புகளை பதிவு செய்தபின்பே எழுதவேண்டும் மேலும் பதிவு செய்யாமல் எழுதப்படுகின்ற கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தலைப்புகள்
1. குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு
2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா?
3. நீங்கள் ஒரு நல்ல கணவரா?
4. நீங்கள் ஒரு நல்ல பெற்றறோரா?
5. தனிக்குடித்தனம் தரமானதா?
6. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா?
7. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?
8. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை
9. பெண்கல்வியின் முக்கியத்துவம்
10. தஃவாவில் பெண்களின் பங்கு
11. பெண்களும் உடற்பயிற்சியும்
12. அழகு சாதனப் பொருட்கள் - ஒர் ஆய்வு
13. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)
14. நமக்கென்று தனி நாளிதழ் - அவசியமும் அவசரமும்
15. பத்திரிக்கை தர்மம்
16. தொடரும் தொலைக்காட்சி அவலங்கள் (மெகா சீரியல்)
17. இயக்க வெறியும் இஸ்லாமும்
18. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி
19. இணையம் (Internet) ஒரு கழுகுப்பார்வை
20. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)
21. கல்வியில் கணினியின் பங்கு
22. செல்ஃபோன் சிந்தனைகள்
23. உலக பொருளாதாரம்
24. வியாபார நுணுக்கங்கள்
25. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் - ஓர் ஆய்வு
26. தவணைமுறை வியாபாரங்கள் - ஓர் ஆய்வு
27. முதல் உதவி மருத்துவங்கள்
28. மருத்துவமும் மனோதத்துவமும்
29. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்
30. இறைவனின் அருட்கொடை [ஃபைபாஸ் சர்ஜரி]
31. டென்ஷன் ஆவது ஏன்?
32. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு
33. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்
34. தனிமனித வழிபாடு - ஓர் ஆய்வு
35. நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள்
36. கற்காலத்தை நோக்கி மனிதன்
37. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)
38. ஷியாயிசம் ஓர் ஆய்வு
39. மேற்குலகு தான் முன்னோடியா?
40. ஈராக் - ஒரு வரலாற்றுப் பார்வை
41. சவுதி அரேபியா - ஒரு வரலாற்றுப் பார்வை
42. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)
43. கிரிக்கெட்
44. ஷேர் மார்க்கெட்
45. சமுதாய உளவியல் பாதிப்புகள்
46. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி

தலைப்புகளைத் தேர்வு செய்ய கீழ்கண்ட எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
0506096740 (+966 50 6096740)
(ஹாஜா முகையிதீன்)
மின்னஞ்சல் முகவரி: suvanam@gmail.com

உங்கள் தலைப்பை இன்றே பதிவு செய்வீர்!

இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா (ஸனாய்யியா), சவூதி அரேபியா

3 comments:

அபூ ஸாலிஹா said...

அன்புச் சகோதரர் மாலிக் அவர்களே,

அவசியமான பதிவு! மிக்க நன்றி!

சமூகத்தில் நிலவி வரும் பிரச்னைகள், இன்றைய முஸ்லிம்களுக்கான தேவைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை சிந்திக்கத் தூண்டும் விதத்தில் தலைப்புகள் அமைந்துள்ளன.

அதோடு விதிமுறைகளில் சில வேண்டுகோள், ஆலோசனைகள்:

1.கட்டுரை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். ( கட்டுரைகள் மூன்று முதல் ஐந்து பக்கத்திற்குள் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதே எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கட்டுரையாளர் வார்த்தைகளை எண்ணிப் பார்த்து எழுதுவது என்பது சற்று கடினமான விஷயம்)


13. ஒருவர் ஒரு தலைப்பின் கீழ் மாத்திரம் கட்டுரை எழுதமுடியும் மற்றும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு மற்றவருக்கு வழங்கப்பட மாட்டாது. (ஏற்கனவே ஒரு தலைப்பு பதிவு பெற்றிருந்தாலும் மற்றவர்களையும் அதே தலைப்பில் எழுத அனுமதிப்பதன் மூலம் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யலாம். தனக்குப் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுக்க இயலாத ஏமாற்றத்தையும், எழுதுபவர் அடைய மாட்டாரே)

ஆசிரியர் குழுவினர் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

மாலிக் said...

அன்புச் சகோதரர் அபூ ஸாலிஹாவிற்கு...
உங்கள் முதல் ஆலோசனை...

// 1.கட்டுரை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். ( கட்டுரைகள் மூன்று முதல் ஐந்து பக்கத்திற்குள் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதே எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கட்டுரையாளர் வார்த்தைகளை எண்ணிப் பார்த்து எழுதுவது என்பது சற்று கடினமான விஷயம்) //

கையெழுத்து கொண்டு எழுதினால் வார்த்தைக்கு வார்த்தை எண்ணிப்பார்க்கத் தேவையில்லை. மூன்று முதல் ஐந்து பக்கத்திற்குள் கட்டுரை எழுதிவிடலாம். ஆனால் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்பவருக்கு வார்த்தைகள் எண்ணும் வசதி எம்-எஸ் வேர்ட்டில் உள்ளதே.. டூல்ஸ் மெனுவில் உள்ள வேர்ட் கவுண்ட் விருப்பத்தை தட்டினால் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று தெரிந்துவிடுமே..

கட்டுரைகள் குறிப்பிட்ட நீளத்தில் இருந்தால் மட்டுமே, வாசிப்பவர்களும் சலிப்படையாமல் படிப்பார்கள்.

அடுத்தது
// 13. ஒருவர் ஒரு தலைப்பின் கீழ் மாத்திரம் கட்டுரை எழுதமுடியும் மற்றும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு மற்றவருக்கு வழங்கப்பட மாட்டாது. (ஏற்கனவே ஒரு தலைப்பு பதிவு பெற்றிருந்தாலும் மற்றவர்களையும் அதே தலைப்பில் எழுத அனுமதிப்பதன் மூலம் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யலாம். தனக்குப் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுக்க இயலாத ஏமாற்றத்தையும்இ எழுதுபவர் அடைய மாட்டாரே) //

இந்தக் கருத்து பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்றுதான்.. தலைப்பைக் கவனித்தீர்களா நீங்கள். ''எழுத்துலகப் புரட்சிப் போட்டி'

மூன்று தலைப்புகள் அல்லது ஐந்து தலைப்புகள் கொடுத்து போட்டி நடத்தினால், அதிகமானோர் ஆர்வத்தோடு கலந்து கொள்வார்கள்.. அதில் சந்தேகமில்லை. இன்றைய சமுதாயத்திற்கு வெளிப்படுத்த வேண்டிய புரட்சிகரமான கருத்துக்கள் முடங்கிவிடக் கூடாது என்பது முதல் கருத்து. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் பிரசுரிக்கப்படும் என்று சொல்லியிருந்ததன் நோக்கம் வளரும் எழுத்தாளர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் கருவியாக சுவனப்பாதை மாத இதழ் திகழவேண்டும் என்பது இரண்டாவது கருத்து.
இதன் அடிப்படையில் தான் ஒருவருக்கு ஒரு தலைப்பு என்ற வரையரை.

இந்தக் கேள்வி பலரிடமும் எழுந்த கேள்விதான். சுவனப்பாதை போட்டிக்குழு பரிசீலனை செய்தபின்தான் இந்த விதிமுறையை சேர்த்துள்ளது,

சகோதரர் அபூஸாலிஹ் அவர்களே.. சீக்கிரம் உங்களுடைய தலைப்பை பதிவு செய்துவிடுங்கள். நீங்கள் விரும்பும் தலைப்பு உங்களுக்குக் கிடைத்து ஏமாறாமல், வெற்றி பெற.. அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக..

...மாலிக்

அபூ ஸாலிஹா said...

தகவல்களுக்கு நன்றி!

சுய சிந்தனையைத் தூண்டி, சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எண்ணும் தங்களின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கிறேன்.