Monday, April 17, 2006

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? சொல்லுங்கள்!

முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் போராட முஸ்லிம்கள் தங்களிடையே உள்ள ஷியா, சுன்னி வேறுபாட்டை மறந்து போராட வேண்டியுள்ளது. நபிவழியை நிலை நாட்ட மத்ஹப் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டியுள்ளது. இந்நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஒன்று த.மு.மு.கவாக இருக்க வேண்டும், இல்லை தவ்ஹீத் ஜமாஅத்தாக இருக்க வேண்டும் என சில அறிவீனர்கள் நினைக்கிறார்கள். த.மு.மு.கவை விமர்சிக்கும் அனைவரும் தவ்ஹீத ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் அனைவரும் த.மு.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள். என் கணிப்பின் படி தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 10 விழுக்காடு பேரே த.மு.மு.க, தவ்ஹீத் ஜமாஅத், பல்வேறு லீக் கட்சிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, மனித நீதிப் பாசறை, ஜாக் போன்ற அனத்து முஸ்லிம் அமைப்புகளிலும் இருப்பர். 10 விழுக்காடு பேர் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற பல்வேறு கட்சிகளில் இருப்பர். 80 விழுக்காடு பேர் எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதவர்கள். இந்த முஸ்லிம்கள் முஸ்லிம் அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை சகோதர வாஞ்சையுடன் விமர்சிக்கக் கூடாதா?

த.மு.மு.கவுக்கு ஒரு பகிரங்கக் கேள்வி
ஆணையம் அமைப்பதை த.மு.மு.க ஒருபோதும் கோரவில்லை என கூறிவந்தது உண்மையில்லை என்பதையும், ஆணையம் அமைக்கக் கோரி த.மு.மு.க செயற்குழுவில் தீர்மாணம் நிறைவேற்றியதையும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, த.மு.மு.கவின் அதிர்காரப் பூர்வ வார இதழான 'மக்கள் உரிமை' யில் வெளியான செய்தியுடன் நிரூபித்துள்ளது. த.மு.மு.கவின் பதில் என்ன?

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரு பகிரங்க கேள்வி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் த.மு.மு.கவில் இருந்து விலகவில்லை. அப்போது, த.மு.மு.க தி.மு.க கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மாத இதழான 'ஏகத்துவம்' இதழில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விமர்சித்து எழுதினீர்கள். இப்போது நீங்கள் அ.இ.அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதின் மாயம் என்ன?

3 comments:

Anonymous said...

அன்புள்ள அருளடியானுக்கு,

தமுமுக துவங்கப்பட்டதிலிருந்து ஓங்கி உரத்து ஒலித்து வரும் முழக்கம் தமிழக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்பதாகும்.

இதனை ஏளனம் செய்தவர்கள், ஏகடியம் பேசியவர்கள் அனைவரும் இன்று ஏதாவது ஒரு வகையில் தனி இட ஒதுக்கீடு குறித்து பேசுவதிலிருந்து தமுமுகவின் பணியின் தூய்மையை அல்லாஹ் அனைவருக்கும் உணர்த்தியுள்ளான். விரைவில் இக்கோரிக்கையை அவனே வெற்றியடையவும் செய்வான் இன்ஷா அல்லாஹ்.

தனி இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் தேவையில்லை என இப்பொழுது கூறும் தமுமுக, 2004ல் களக்காட்டில் நடந்த செயற்குழுவில் ஆணையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது ஏன்?

இப்படி ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது உண்மைதான். இச்செயற்குழு நடைபெற்ற தினத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன் ஆந்திரா அரசு பிறப்பித்த உத்தரவை, ஆந்திரா உயர்நீதி மன்றம் ரத்து செய்த நிலையில் தீர்ப்பின் விபரம் முழுவதுமாக வெளியாகாத நிலையில் அப்படி ஒரு தீர்மானம் போடப்பட்டது உண்மை.

ஆனால், பிறகு தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்ததன் பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்டோராக இனம் காணப்படாத நிலையில் உள்ளதால் தான், அந்நிலை என தெளிவான பின் தமிழகத்திற்கு ஆணையம் அவசியம் இல்லை, என்ற நிலையை தமுமுக ஊறுதிப்படுத்திக் கொண்டது.

தமுமுகவை சாராதவர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த விளக்கம்.

அன்புடன்
இறையடியான் 18.04.2006

அருளடியான் said...

என் விமர்சனத்துக்கு பதில் அளித்த இறையடியான், அபூ ரும்மானா ஆகிய இருவருக்கும் நன்றி!

Anonymous said...

//தேர்தல் என்று வந்ததும் அரசியல் கட்சியினர் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பண மூட்டைகளைத் தேர்தல் களத்தில் வந்து கொட்டுகின்றனர். தண்ணீராய்ப் பாய்ச்சுகின்றனர். இதில் பரிசுத்த முஃமினும் ஈமானைப் பறி கொடுத்து விடுகின்றான்.//

//இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அமைக்கும் மேடைகளில், அவர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்யாமல், தனி மேடை அமைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளோம்.//


//தனி மேடை அமைத்து// யாருடைய/எந்த காசில் என்பதையும் சற்று விளக்கலாமே சகோதரரே!

//தேர்தல் என்று வந்ததும் அரசியல் கட்சியினர் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பண மூட்டைகளைத் தேர்தல் களத்தில் வந்து கொட்டுகின்றனர். தண்ணீராய்ப் பாய்ச்சுகின்றனர்.// இந்த காசில் தானே? அல்லது சொந்த காசிலா? ஒவ்வொரு கூட்டத்திற்கும் தாங்கள் செய்யும் செயலுக்கு நியாயம் கற்பிக்க இயலும். தற்போது இயக்கங்களிடம் நாம் காணும் நிலையும் அது தான். சரி அதை விடுங்கள்.

//கும்பகோணத்தில் பல இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பேரணி மாநாட்டை நாம் நடத்தினோம்.//

இதனைக் குறித்து எனக்கு ஓர் சந்தேகம். விளக்குவீர்களா?

நீங்கள் பல இலட்சம் எனக் கூறியுள்ளீர்களே! பல என்றால் எத்தனை என்று குறிப்பிட்டு கூற முடியுமா? இதனைக் குறித்து ஏற்கெனவே அஹ்மது என்பவர் அபூ ராஜியா அவர்களிடம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. அதனை அப்படியே இங்கு வைக்கிறேன். சற்று விளக்குங்களேன்.

அன்புள்ள சகோதரர் அபூராஜியா அவர்களுக்கு,

நீங்கள் ததஜ என்ற நினைப்பில் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் கூறுவீர்களா?

கும்பகோணம் மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் கூடியதாக/கூட்டியதாக ததஜவினரால் திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப்பட்டது. இது உண்மை. சகோதரர் பி.ஜே அவர்கள் ஜெ.ஜெ யை சந்தித்த பொழுது மட்டும் 1 லட்சம் பேர் கூடியதாக கூறினார் என்று நான் கேள்விப் பட்டேன். இது உண்மையா? இச்செய்தியின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்வதற்காகவே இதனைக் கேட்கிறேன்.

இவ்வாறு சகோதரர் ப்.ஜே கூறியது உண்மை தான் எனில்,

1. இந்த இரண்டில் எது உண்மை? 1 லட்சமா? 10 லட்சமா?

2. 1 லட்சம் உண்மையெனில் நிராகரிப்பாளர்களிடம் உண்மையாக இருந்து கொண்டு நம்பிக்கையாளர்களிடம் பொய் கூறுவது எவ்வகையில் சேர்த்தி?

3. 10 லட்சம் உண்மையெனில் எதற்காக ஜெ.ஜெ யிடம் 1 லட்சம் என நமது சக்தியை குறைத்து கூற வேண்டும்.

ததஜ சகோதரர்களிடமிருந்து உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வினை நினைத்து உண்மையை மட்டும் கூறவும்.

அன்புடன்

இஸ்லாமிய (இயக்கம் சாரா)சகோதரன்
திருவை தென்றல் அஹ்மது