Saturday, April 29, 2006

த.மு.மு.க வின் அந்தர் பல்டி

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..
த.மு.மு.க வின் அந்தர் பல்டி

த.மு.மு.க வின் அதிகாரபூர்வ இனையம் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளை புறக்கனிப்போம் - த.மு.மு.க அநிவிப்பு என்ற தலைப்பில் வாசகன் பதிந்த செய்தியையும் அதற்டகு சகோ. அருளடியான் இட்ட மறுமொழியையும் நினைவு கூர்கின்றேன். சிரிப்பு வருகின்றது.

இவர்கள் எந்த அரசியல் வாதிக்கும் சளைத்தவர்களிள்ளை. அருளடியான் தமீமுன் அண்சாரிக்கு கொடுத்த கைகுலுக்களை வாபஸ் பெருவாரா??

இப்படி ஒரு அந்தர் பல்டி இதுவரைக்கும் பார்த்ததில்லைப்பா !!
சுவடு காய்வதற்குள் மறப்போம் மன்ணிப்போம்.என்கின்றார் பெருந்தலைவர் ??? ஜவாஹிருல்லா

ஆஹா.. ஆஹா.. அருமையிலும் அருமை மறப்போம் மன்னிப்போம் பாடம் கலைஞர் கற்று கொடுத்ததா??? பக்கா அரசியல்வாதி எல்லாம் தோத்தாம்பா..

பாசங்களுடன்
முகவைத்தமிழன்




2 comments:

Anonymous said...

இப்படி முன்னுக்கு பின் முரணாக செயல்படும் த.மு.மு.க. தலைமையினரை அதன் தொண்டர்கள் கண்டிப்பார்களா?

நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா என்று கேட்ட உத்தமர் அருள் அடியான் தமீம் அன்சாரியுடன் கைகுலுக்குவதாக சொன்னதற்கு வருத்தம் தெரிவித்து கால் குலுக்குவாரா?

இப்படியே போனால் த.மு.மு.க.வின் தலைவர்கள் மஞ்சள் சால்வையுடன் வலம் வர துவங்கிவிடுவர்களே..

கருப்பு, வெள்ளை கொடியில் வெள்ளையை எடுத்துவிட்டு சிகப்பை சொருகிவிடுவர்களே..

அடுத்தடுத்த பொதுக்குழு, செயற்க்குழுக்களை அண்ணா அறிவாலயத்திலே நடத்தினாலும் நடத்திடுவார்களே..

அய்யகோ! இது என்ன வேதனை! அரசியல்வாதிகள் தான் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத டிராமா நடத்துகிறார்கள் என்றால் இவர்கள் வேறு ஏன் சினிமா காட்டுகிறார்கள்.

கண்கள் ரொம்பத்தான் கூசுகிறதப்பா..!

அருளடியான் said...

த.மு.மு.க.வின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் தான் இருக்கிறது. என்றாலும் த.மு,மு.க.வைச் சேர்ந்த சகோதரர்கள் தேர்தலுக்குப் பிறகாவது பா.ம.கவின் சந்தர்ப்பவாதத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதுபோல, தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள், வைகோவின் அரசியல் பித்தலாட்டத்தை புரிந்து கொள்ளூம் நாள் வெகு தொலைவில் இல்லை. என் சக முஸ்லிம் சகோதரர்களில் ஒருவருக்கு கொடுத்த கை குலுக்கலைத் திரும்பப் பெறத் தேவையில்லை. அதே நேரத்தில் அவர்களது இந்த முடிவை கண்டிக்கிறேன். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு என் எதிர்ப்பை நேரிலும் தெரிவிப்பேன்.