Sunday, March 13, 2005

விவாதங்களில் வெற்றி பெறுவது எப்படி?

விவாதங்களில் வெற்றி பெற நிறையப் படிக்க வேண்டும் - அருளடியான்

திண்ணை இணைய வார இதழில் இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்து நிறைய கட்டுரைகள் பிரசுரமாகின்றன. அக்கட்டுரைகளில் சில வரிகளை ஆசிரியர் குழு நீக்கங்கள் செய்தும் வெளியிடுகிறது. எனவே, அக்கட்டுரையாளர்கள் தங்களுக்கு தனி வலைப்பக்கங்கள் தொடங்கி இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் விமர்சனங்களை எழுதி வருகின்றனர். இவ்விமர்சனங்களை 1. முஹமது நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்து தனிப்பட்ட வாழ்க்கை மீதும் விமர்சனம். 2. இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் மீதான விமர்சனம்-குறிப்பாக பெண்களுக்கான சட்டங்கள் மீது விமர்சனம் 3. முஸ்லிம் நாடுகளின் சட்டதிட்டங்கள் மீதான விமர்சனம் 4. பர்தா முறை மீதான விமர்சனம் 5. முஸ்லிம்களிடம் நிலவும் ஃபிக்ஹு கருத்து வேறுபாடுகள் மீதான விமர்சனம் 6. ஷியா-சன்னி வேறுபாடு பற்றிய விமர்சனம் எனப் பிரிக்கலாம். எனக்குத் தெரிந்த வரை வகைப்படுத்தியுள்ளேன். மேலும் பல பிரிவுகளாகவும் பிரிக்கலாம். தமிழ் நாட்டில் இஸ்லாத்தைப் பற்றி விமர்சிப்பவர்கள், பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததைப் போல இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே புரியாமல் விமர்சிக்கவில்லை. குர் ஆன் தமிழாக்கம், முஹம்து நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு, ஹதீஸ் நூல்கள், இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் - இவற்றைப் படித்து விட்டு விமர்சிக்கிறார்கள். இவர்களது மேற்கோள்களில் சில நேரங்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றாலும், இஸ்லாத்தைப் பற்றிப் படிக்க இவர்கள் எடுத்துக் கொள்ளூம் நேரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருவர் ஹாருண் யஹ்யாவின் அறிவியல் கட்டுரைகளை விமர்சித்து திண்ணையில் தன் எதிர்வினையைப் பதிவு செய்தார். ஹாருண் யஹ்யாவின் படைப்புகளை படிக்காமல் எதிர்வினையைப் பதிவு செய்யமுடியாது. அது போல முஸ்லிம் நாடுகளின் செயல்பாடுகளை இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூர்ந்து நோக்குகிறார்கள். முஸ்லிம் நாடுகளின் செயல்பாடுகள் மீது நமக்கும் கூட ஆதங்கம் உள்ளது என்றாலும், இவர்களுடைய பார்வைக்கும் நமக்கும் வேறுபாடு உள்ளது.

இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது, விவாதங்களில் ஈடுபடுவோர், ஜாகிர் நாயக்கைப் போல இந்து வேதங்களைப் பற்றிய அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இந்திய சமூகத்தைப் பற்றி பெரியார், ராகுல்ஜி, ஈ.எம்.எஸ் ஆகியோர் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். அதனால் நம் எழுத்து வலிமை பெறும். சங்பரிவார எழுத்தாளர்களைப் போல நாமும் நீண்ட கட்டுரைகளைத் தான் எழுத வேண்டும் என்பதில்லை. உரிய சான்றுகளுடன் சுருக்கமான கட்டுரைகள் எழுதினாலே போதும்.

No comments: