Thursday, March 31, 2005

விவாதங்களும் விளக்கங்களும்!

ஜாபர் அலி தனது வலைப்பதிவில் "நிராகரிக்கும் வாதத்தையும், பரிகசிப்பையும் தங்கள் எழுத்து திறமையால் எதிர்கொள்வோரே கவனியுங்கள்!" என்ற தலைப்பில் சில திருமறை வசனங்களை பதிந்துள்ளார். குறிப்பாக வசனம் 6:68 "(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்".

இதன் அடிப்படையில் பார்த்தால்,நேசகுமார் போன்றவர்களின் விஷம பிரச்சாரத்திற்கு முஸ்லிம்கள் பதிலளித்துக்கொண்டிருப்பதைவிட புறக்கணித்துவிடுவதே சிறந்தது என்ற அர்த்தம் தொனிக்கிறது.

இது குறித்து தெளிவான விளக்கம் அறிய விரும்புகிறேன். சகோதரர்களே! உதவுங்கள்!

3 comments:

Abu Umar said...

ஜாஃபர் சுட்டிக்காட்டிய வசனத்திற்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் சம்மந்தமேயில்லை.

இஸ்லாத்தைப்பற்றி ஒருவர் தவறான எண்ணங்களை பொது இடத்தில் விதைக்கிறார். அதுவும் இஸ்லாமிய ஆதாரங்கள் என்று, இட்டுக்கட்டிய ஹதீஸ்களையும், இஸ்லாமிய எதிரிகளின் சிந்தனைகளையும் தூசி தட்டி புதிய பெயிண்ட் அடித்து மக்களின் முன்வைக்கும் போது, அவைகள் குப்பை அன்றி வேறொன்றுமில்லை என்று மற்றவர்களுக்கு (நேசகுமாருக்கு அல்ல) ஆதாரத்துடன் நிரூபிப்பதையே தங்களது எழுத்து முயற்சியால் நண்பர் செய்கிறார்கள்.

தவறினை கண்டால், கையால் தடுக்க வேண்டும் அது முடியவில்லையென்றால் வாயால் தடுக்கவேண்டும் அதுவும் முடியவில்லையென்றால் வெறுத்து ஒதுங்கி இருக்கலாமே. அதைவிட்டு தவறினை தடுப்பவர்களை குறை சொல்லும் ஜாஃபர் போன்றவர்களை என்னவென்று சொல்வது.

குர்ஆன் வசனங்களை எடுத்து சுய ஆராய்ச்சி என்ற பெயரில் ஜாஃபர் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.

ஜாஃபர் அலி அவரின் சுய ஆராய்ச்சியை இஸ்லாமிய அறிவு பெற்றவர்களிடம் சொன்னாரென்றால் அவர்கள் அவரை திருத்தம் செய்வார்கள். அதனை விட்டு பொது இடங்களில் அதனை இடும்போது அதுதான் இஸ்லாம் என்றெண்ணி இஸ்லாத்தை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

இதற்கு ஒரு அனுபவம் ஜாஃபருக்கு போதவில்லையா?

Abu Umar said...

இந்த பதிலை அவரின் வலைப்பதிவில் வைக்க முயற்சி செய்தேன். அவரின் பதிவு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இங்கே இட்டிருக்கிறேன்.

Sardhar said...

அபூ உமரின் கருத்துக்கு நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

இங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது வீண் விவாதம் அல்ல! விஷ(ம)த்தைக் களையெடுக்கும் விவேகம்.