Saturday, March 19, 2005

ரேடியோ ரியாத்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வழக்கமா இரவு 11 மணிக்கு தூங்குவதுக்காக படுக்கைக்கு போறது பழக்கமாயிபோயிருச்சு. எதைத் தள்ளிப்போட்டாலும் போடுவேன் தூக்கத்தை தள்ளிப்போடுறது முடியாத ஒண்ணாயிடுச்சு..

காதுல வாக்மேனோட கிளாசிக் சாங்ஸ்சும், ரொமாண்டிக் சாங்ஸ்சும், அல்டிமேட் ஹிட்ஸும் கேட்டுகிட்டே தூங்குன காலம் எல்லாம் மறந்தே போயிடுச்சு. மியூசிக் இஸ்லாத்துல கூடாது என்பதால ஓரங்கட்டி வைச்ச நிறைய பாட்டு கேசட்.. எல்லா கேஸட்டுக்குள்ள இருக்கிற ரீலும் கெட்டுப் போயிடுச்சு..

எப்படியாவது "அம்ம ஜுஸ்" (30th part of Quran) மனப்படாம் செஞ்சிடனும் எங்கிறது என்னோட இரண்டுவருட திட்டம் இன்னும் நீண்டுகிட்டேயிருக்கு.. இனிமே மனப்பாடம் செஞ்சாலும் அதை வைச்சு போட்டியில கலந்து பிரைஸ் ஒண்ணும் வாங்க முடியாது, ஏன் என்னா இப்பொ எல்லாம் சின்ன வயசுலேயே புள்ளைங்க எல்லாம் ரொம்ப அழகா மணப்பாடம் செஞ்சிடுறாங்க.. வயசு முப்பதத் தொடப்போவுது.."அம்ம ஜுஸ்" மணப்பாடம் செய்யமுடியில வெக்கமாயிருக்கு..

இருந்தாலும் என்னோட முயற்சி தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.. டெய்லி இமாம் காரித் அஷ்ஷாப் முஹம்மது அல் பர்ராக் அவங்களோட இனிய குரலில் இருக்கிற அம்ம ஜுஸ் கேஸட்டை கேட்டுகிட்டே தூங்குற பழக்கம்..

தினமும் ஒரு முறை, இரண்டு முறை என்னு கேட்டு கேட்டு கேஸட்டு தேஞ்சு போச்சு.. பலமுறை கேஸட்டோட ரீல் டேப்ல சுத்திக்கும், சில டைம்ல டேப் இழுக்கும் போது தூக்கத்துல பட்டுன்னு ஆப் பண்ணுல என்னா கடிச்சு வைச்சிடும் (டேப் கடிக்கிறது என்னையில்ல கேஸட் ரீலை. சரி நானும் உங்களைக் கடிக்கில விஷயத்துக்கு வர்ரேன்)

இப்படித்தான் 15.03.2005 அன்று டேப்ல ரீல் சுத்துகிச்சு... கேஸட் சுத்தி நின்னா, உடனே தூக்கத்தில இருந்துகிட்டே டேப்பை நிறுத்திட்டு, ரேடியோ மோடுக்குத்(Mode) தாவிடுவேன். M.B.C ரேடியோவுக்குப்போன அங்கேயும் அரபி பாட்டுகள் (ஹபீபீ ஹபீபி பாட்டுக்கள்)தான் ஒலிக்கும் என்பதால..டிஃபால்டா(Default) என்னோட ரேடியோ மோடு அல்-குர்ஆனில் கரீம் மம்லகத்துல் அரபித்துஸ் ஸவுதியா' (The Quran Radia - Kingdom Of Saudi Arabia) வுலதான் இருக்கும்..

செல்போன் ரேஞ்சு பிராப்ளம் மாதிரி என்னோட ரேடியோவிலும் ரேஞ்சு பிராப்ளம் போலிருக்கு. ஓ பிரிக்கோன்ஸி (Frequency) பிராப்ளமா? கர்.. கொர் என்னு சத்தம்தான் வந்திச்சு குர்ஆன் கிராத் எதுவும் வருல.. அங்கேயும் பிரச்சனை என்னு லேசா ரேடியோ டியூனரை சுழட்டுனேன்.

தி ரேடியோ ரியாத் இங்லீஷ் பிராட்காஸ்டிங் சர்வீஸ் என்னு கிளியரா கேட்டிச்சு இதையே கேக்கலாம் என்னு சவுண்ட் கொஞ்சம் இங்க்கிரீஸ் பண்ணுனேன்.

(எதையோ நான் ரீல் சுத்தப்போறேன் என்னு நினைக்கிறீங்களா? என்னோட டேப்தான் ரீல் சுத்துனதே ஒழிய, நானில்ல!)

ரேடியோ ரியாத்ல எப்பவுமே 9 மணியிலேருந்து நல்ல புரோகிறாம் எல்லாம் இருக்கும்.. அதுல ஒண்ணு பெரிய பெரிய டாக்டர்ஸ், இன்ஜினியர்ஸ், மினிஸ்டர்ஸ் என்னு பல பிரபலங்களையெல்லாம் பேட்டி எடுக்கிறது.

நேத்து நான் கேட்ட பேட்டி ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான பேட்டி.. பேட்டிய முடிஞ்ச அளவுக்கு அப்படியே சொல்லுறே கேட்டுக்குங்க..(தூக்கத்துல கேட்டாலும் தெளிவா புரிஞ்சுகிட்ட விஷயங்களைத்தான் சொல்றேன்)

பேட்டி எடுக்கப்பட்டவர் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன் நாட்டு சகோதரரர்..
பெயர் என்னா என்னு கேட்டதுக்கு அழகாச் சொன்னாரு அப்துர்ரஹ்மான் என்னு,
எங்கே வேலை செய்யிறீங்க? - "யான்பு" வில இருக்கிற சஹ்ரான் கம்பெனியில
என்னாவா இருக்கீங்க? - ஆட்டோகாட் ஆப்பரேட்டரா
எப்போ இருந்து இருக்கீங்க? - 1996ல் இருந்து
எப்போ இஸ்லாத்தை ஏத்துக்கிட்டீங்க? - 4 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சு.
இஸ்லாம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? - தாஃவா சென்டர்ல இருந்துதான் முதலில் ஆரம்பமாச்சு, நிறைய டிரான்ஸ்லேஷன் (translation) இருக்கிற புக்ஸ் எல்லாம் கொடுத்தாங்க, இங்கிலீஷ் குர்ஆனை கொடுத்தாங்க அதெல்லாம் நான் படிச்சு பார்த்தேன்.

பிலிப்பைனில் இருக்கும் போது எவரி சண்டே சர்ச்சுக்குப் போயிடுவேன், பைபிள் படிச்சிருக்கேன். இங்கே எனக்கு இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன் குர்ஆன் கொடுத்ததும் அதோட நான் ஒப்பிட்டுப் பார்த்தேன், இரண்டுக்கும் இருக்கிற சிமிலாரிட்டீஸ் என்னா என்னு பார்த்தேன்.

கிரிஸ்டின்ஸ் ஜீஸஸ்'ஐ கடவுளாக்கிகிட்டது தவறான கொள்கை என்பதை உணர்ந்தேன். அதனால நான் இஸ்லாத்தை ஏத்துக்கிட்டேன்.

இஸ்லாத்தை எப்படியெல்லாம் நீங்க விரும்புறீங்க? - முஸ்லிம்கள் எல்லாம் நல்லவங்களா இருக்கிறது, மென்மையா பழகுறது இதெல்லாம் எனக்கு ரொம்பவே பாதிச்சது. பிடிச்சிருந்தது. காலையிலேயே நான் தூங்கிட்டு இருக்கும் போது பள்ளியில கொடுக்குற இனிமையான அந்த பாங்கு "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்" கேக்கிறத்துக்கு நல்லா இருக்கும். அதைக்கேட்டவுடனே நான் எழுந்திருச்சுடுவேன்.

பிஸ்மில்லாஹ் என்று சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லுறத்துக்கு சுருக்கமாகவும் இருக்கு. In the Name Of God, In the Name Of Jesus என்னு சொல்றதை விட பிஸ்மில்லாஹ் என்னு சொல்றது நல்லாயிருக்கு. "அல்ஹம்துலில்லாஹ்" இஸ்லாம் எனக்குக் கிடைச்சிருச்சு..

உங்கக் குடும்பத்தைப் பற்றி?

அப்பா இஸ்லாமியன், அம்மா தீவிர கிரிஸ்டின் அவங்களும் இப்பொழுது இஸ்லாத்தைப் படிச்சுட்டு வர்ராங்க! அதனால நான் இஸ்லாத்தை ஏத்துக்கும் போது எந்தவிதமான எதிர்ப்பும் எனக்கு இல்லை!

நீங்க இஸ்லாத்தை ஏத்துக்கிட்டதுக்குப்பிறகு உங்க சக நண்பர்கள் எப்படி உங்ககிட்ட பழகுனாங்க? - நான் இஸ்லாத்தை ஏத்துக்கிட்டதுக்கு பிறகு இங்கே இருக்கிற நண்பர்கள்கிட்ட நான் எந்த விதமான மாற்றமும் பார்கவில்லை. என்னோட அவங்க தர்க்கம் பண்ணல.. நான் 2002 வெக்கேஷன் லீவுல பிலிப்பைன்ஸ் போன போது என்னோட நண்பர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியாகப் பேசினாங்க..

2001, செப்டம்பர்-11 அட்டாக் நடந்து முடிந்த நேரம் அது, அப்போ என்னோட நண்பர்கள் எல்லாம் முஸ்லிம்கள் எல்லாம் கொடுமையானவங்க.. இஸ்லாம் வந்து வன்முறையானது என்னு எல்லாம் சொன்னாங்க.. அவங்ககிட்ட நான் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் விளக்கிச் சொன்னேன்.

முஸ்லிம்களுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் எங்கிறது அமைதியான மார்க்கம். என்னு சொன்னேன்.. ஒரளவிற்கு விளங்கிக் கொண்டார்கள். அவங்க என்னிடத்தில் கேட்டது ஒரு இங்கிலீஷ் டிராஸ்லேஷன் குர்ஆன். அதுக்கு பதிலா நான் மூணு இங்கிலீஷ் குர்ஆன் கொடுத்து அனுப்பினேன்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது என் மனதுக்கு திருப்தியளிக்கிறது. என்னு செல்லிமுடிச்சார். பேட்டி எடுத்தவரும் நன்றிசொல்லி பேட்டிய முடிச்சுகிட்டார்.

நான் மூணு வருஷமா வேலை செய்யிற கம்பெனியிலும் பீபீங்க(பிலிப்பைன் நாட்டுக்காரங்க) நிறைய பேர் வேலை செய்யிறாங்க.. சகோதரர் அப்துர் ரஹ்மானோட இங்கிலீஷ் பேச்சு எனக்கு தெளிவா விளங்கிச்சு.

கிட்டத்தட்ட நானும் சகோதரர் அப்துர் ரஹ்மான் மாதிரிதாங்க.. பேரளவுக்கு முஸ்லிமா இருந்துட்டு வந்தாலும் உண்மையான இஸ்லாம் நான் தெரிஞ்சுகிட்டது ஜித்தா தஃவா சென்டர்லதாங்க.. தமிழ் மீனிங்கோட குர்ஆனை படிச்சுட்டு வர்ரேனுங்க.. அவர் சொல்லுற மாதிரி இஸ்லாம் எங்கிறது எவ்வளவு ஒரு தெளிவான மார்கம். எப்படியோ சகோதரர் அப்துர் ரஹ்மான் பேட்டிய உங்களுக்குச் சொல்லுற சாக்குல என்னோட பேட்டியும் உங்களுக்குச் சுருக்கமா சொல்லிப்புட்டேனுங்க..

இதை ஏய்யா இங்கே வந்து சொல்லுறே என்னு கேக்கிறீங்களா? (www.tamilmuslim.blogspot.com வேற எதுக்கா தொறந்து வச்சுறுக்காங்க)

நானும் ஒரு எழுத்தாளனா மாறுனும் என்னு நிறைய ஆசையிருக்குங்க.. இஸ்லாம் எங்கிறது அமைதியான மார்க்கம் என்னு புதுசா இஸ்லாத்தை ஏத்துக்கிட்ட பிலிப்பைன் சகோதரர் அப்துர்ரஹ்மான் தன்னோட நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது, நானும் இந்த எழுத்து மூலமா இஸ்லாத்தை என்னோட நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?

படிக்கிற உங்களுக்கும் அந்தமாதிரி ஏதாவது எண்ணம் உண்டானா பட்டுன்னு கீழேயிருக்கிற ஸ்டெப்ஸ் ஃபால்லோ பண்ணுங்க..

http://tamilmuslim.blogspot.com/2005/01/blog-post.html

நீங்களும் உங்களோட எழுத்துப்படைப்புகளை போஸ்ட் பண்ணுங்க.

என்னைப்போல எழுத்துப்பயிற்சி எடுக்கிறத்துக்கு இடம் செஞ்சு கொடுத்ததுக்கு நன்றிங்க! பொறுமையா படிச்ச உங்களுக்கும் நன்றிங்க..

கேஸட்டை சரிசெஞ்சு அம்ம ஜுஸ் மணப்பாடம் செய்யுனுமுங்க! நானு வர்ரேனுங்க...

வஸ்ஸலாம்.

-மாலிக் கான்-

No comments: