Monday, March 14, 2005

கற்காலம் கட்டுரையின் விளக்கம்.

கற்காலம் கட்டுரையின் முரண்பட்ட கருத்தை சுட்டிக்காட்டியுள்ளேன்!

கற்காலம் சொல்லும் கருத்து!?

3 comments:

Abu Umar said...

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விஷயத்துக்கு மரணதண்டனையை நிறைவேற்றுகிறது. தனக்கு பிரச்சினைகள் வந்தால் தவிர அறிவுஜீவிகள் என்ற பெயரில் மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்ட தனஞ்சய சாட்டர்ஜி என்ற கோல்கத்தா கொடியவனுக்கு, மரண தண்டைனை நீக்க சொல்லி வக்காலத்து வாங்கியவர்கள்தான் இந்த அறிவுஜீவிகள்.

எனது முன்னால் கட்டுரையை பார்வையிடவும்.

http://nihalvu.blogspot.com/2004/08/blog-post_09.html


தற்பொழுது நீங்கள் சூழ்நிலைக்கு ஒவ்வாத விஷயத்திலும் இடத்திலும் விவாதத்தில் இறங்கியுள்ளீர்கள். நாகூர் ரூமி எழுதிய இறைநேசர் ஜாஃபர் சாதிக் கட்டுரையை திண்ணையில் படித்தீர்களா? இஸ்லாத்தை இஸ்லாத்திற்கு எதிரான திசையில் அதுவும் அவருக்கு எதிரான ஹதிஸ்களை அக்கட்டுரையிலேயே எழுதியிருக்கிறார். குடும்பத்தையும் மக்களையும் துறந்து துறவறம் போகும் சூஃபிசத்திற்கு எதிராக எழுதினாலும், யாராவது இஸ்லாத்தைப்பற்றி நல்லெண்ணம் கொள்வதற்கு வழி உண்டு.

மாணவனாக எனது கேள்வி. தயவு செய்து இங்கு பதில் எழுதுங்கள் போதும்.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளில் அக்காலத்தில் மரணதண்டனைக்காக செய்யப்பட்ட அதே வழியிலேயே இப்பொழுதும் நிறைவேற்றவேண்டுமா? (அதாவது தலைவெட்டுவதற்கு பதில் சுடக்கூடாதா? கல்லெறிவதற்கு பதில் பொதுமக்கள் கூடும் இடத்தில் வைத்து சுட்டால் அடுத்தவனுக்கு சுரணை வராதா?)

முஸ்லிம்களை ஒழிப்பதற்காக படையெடுத்து வரப்பட்ட எதிரிகளை ஒழிக்க இஸ்லாமிய போர்களில் வாள், கேடயம், குதிரை, ஒட்டகம் போன்றவைதான் பயன்படுத்தப்பட்டது. நபியவர்கள் இருக்கும் வரை அந்த போர் ஆயுதங்களைத்தான் பயன்படுத்தினார்கள். வாளும் கேடயமும்தான் சுன்னா என்று யாரும் சொல்வதில்லை.

நபி(ஸல்) அவர்கள் தஃவா செய்தது இணையத்திலோ சேனல்களிலோ அல்ல. மற்றவர்களிடம் நேரடியாகவோ கடிதம் மூலமாகவோ அல்லது வாழ்ந்து காட்டுவதன் மூலமாக மற்றவர்களுக்கு இந்த கொள்கையை அறிமுகப்படுத்தினார்கள். ஆக மொத்தத்தில் செய்திகள் போய் சேருவதுதான் தஃவா என்று புரிந்து வைத்திருக்கிறோம்.

அதுபோல இதனை புரிந்துக்கொள்ள கூடாதா?

அபூ முஹை said...

அன்பின் சகோதரர் அபூ உமர் அவர்களுக்கு, பிறர் நல்லெண்ணம் கொள்வதற்காக எழுதவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை, கசையடியா? கல்லடியா? என்பதை இஸ்லாத்தின் உரைகல்லோடு உரசிப்பார்த்து இஸ்லாம் வழங்கும் தண்டனையை உள்ளபடி தீர்ப்பாக வழங்குவது அரசாங்கம்தான். தண்டனை வழங்கும் அதிகாரத்தில் மூக்கை நுழைக்க, ஆட்சியாளர்களைத் தவிர வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை.

அரசாங்கம் பரிசீலிக்க வேண்டிய குற்றவியல் சட்டத்தில் நாகூர் ரூமி தேவையில்லாமல் மூக்கை நுழைத்திருக்கிறார். கொஞ்சமும் நேர்மையில்லாமல், தன் கருத்துக்காக குர்ஆன் வசனங்களை வளைத்து, பல ஆதாரப்பூவமான நபிமொழிகளை மறுத்திருக்கிறார். இதைக்கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்ளா?

அடுத்து..
தலைவெட்டு, கல்லெறிந்து கொல்லும் தண்டனையை மாற்றி சுட்டுக் கொல்வது மூலம் மரணதண்டனையை நிறைவேற்றலாம் என்பதில் எனக்கு உடன்பாடுதான் என்றாலும் இது அரசாங்கம் பரிசீலிக்க வேண்டிய விஷயம். இஸ்லாமிய அரசாங்கத்திடம் இதை வலியுறுத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம்,

எப்படி நிறைவேற்றினாலும் மரணதண்டனை ஒன்றுதான் என்றால், ''நபி(ஸல்) அவர்கள் தலை வெட்டாகவும், கல்லெறியாகவும் மரண தண்டனையைப் பிரித்து நிறைவேற்றச் சொன்னார்கள்''? என்ற கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.

(நாகூர் ருமியின், இறைநேசர் ஜஃபர் சாதிக் கட்டுரையின் தொடுப்பை அனுப்புங்கள் நேரமிருக்கும்போது அதையும் பரிசீலிப்போம்)

Abu Umar said...

///(நாகூர் ருமியின், இறைநேசர் ஜஃபர் சாதிக் கட்டுரையின் தொடுப்பை அனுப்புங்கள் நேரமிருக்கும்போது அதையும் பரிசீலிப்போம்)///

http://thinnai.com/ar0304051.html