Tuesday, March 01, 2005

தொழுகை (பகுதி 3)

பகுதி 3:
'நெருப்பினால் படைக்கப்பட்ட நான் மண்ணிணால் படைக்கப்பட்ட ஆதத்திற்கு பணிவதாவது' என்று ஷைத்தான் கூறினான். நான் நினைக்கிறேன் அவன் தலைசிறந்த தௌகீது வாதியாக தான் அந்த நேரத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ் அவனை விரட்டியடித்து விட்டான் அவனது வார்த்தைகளை மீறியதற்காக.

போலீஸ் ஒருவர் ஒரு திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். திருடனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இப்பொழுது போலீஸ்காரரின் எண்ணங்கள் அவரிடம் பேசியது.. 'நீ எத்தனை பயிற்சி எடுத்திருக்கிறாய்.. எத்தனை பேரை பிடித்திருக்கிறாய்.. உன்னை ஒரு திருடன் முந்துவதா..' என்று.. திடீரென்று அவர் உள்மனதிலிருந்து வேகம் வெளியே வந்தது. பாய்வது போல் ஓடினார்.. இந்த முறை திருடனை நெருங்கி விட்டார்.. கிட்டே வந்து விட்டார்..திருடனை நெருங்கியவர் திருடனை பிடிக்காமல் திருடனை தாண்டி ஓட ஆரம்பித்து விட்டார்..

இந்த கதையில் வருவது போல் நம் வாழ்க்கையும்.. கிப்லாவை முன்னோக்கி என்றும் அல்லாஹ்விற்காக என்றும் கூறுகிற நாம் அந்த நிய்யத்தை தாண்டி நம் எண்ணங்கள் போகும் போது ஷைத்தானுக்கு நேர்ந்த கதி நமக்கும் நேர்ந்து விடும்.. அவன் இலக்கு அல்லாஹ்வை தாண்டி போகும் போது அவனது கடமையை மீறிய போது விரட்டப்பட்டவனாகிவிட்டான்.தொடரும்..

1 comment:

நிர்வாகி said...

கட்டுரையை பதிவு செய்யும்போது இரண்டு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும்.

தொடர் எழுதும்போது அத்தொடரின் பகுதி எண்ணை சப்ஜெக்ட்-ல் கொடுத்துவிட்டால் எனக்கு சற்று வேலை குறையும். பிந்தைய நாட்களில் எளிதாக தேடி எடுக்க முடியும்.

பொருளடக்க அட்டவணை பக்கம் ஒன்று தயார் செய்து, ஒவ்வொரு பத்து பதிவுகளுக்கும் அப்டேட் செய்யலாம் என்று எண்ணுகிறேன். இப்பக்கத்தின் சுட்டி F.A.Q பகுதியில் இணைக்கப்படும்.

Also give line space between the paragraphs. This you have to manage, after paste the contents into the posting place.

அன்புடன்
நிர்வாகி