Saturday, March 05, 2005

முஸ்லிம் மாணவி தொடுத்த வழக்கில் வெற்றி!

வெகு வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தனது அடக்குமுறையை முஸ்லிம்கள் மீது கையாளும் மேற்கத்திய அரசின் கலாச்சாரத்தை எதிர்த்து 15 வயதுள்ள ஷபீனா பேகம் எனும் லண்டன் பள்ளியின் முஸ்லிம் மாணவி தொடுத்த வழக்கில் வெற்றி அடைந்துள்ளார்.

Shabeena Begum

ஷபீனா பேகம்


கைகள் மற்றும் முகம் தவிர மற்ற உறுப்புகளை மறைக்கும் "ஹிஜாப்" உடை அணிந்து ஷபீனா பேகம் பள்ளிக்கு வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததை அடுத்து, இந்த வழக்கு பள்ளி நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டது.

பெண்களுக்கு "முழு" சுதந்திரம் வழங்குகிறோம் என மார்தட்டும் பிரிட்டனில் ஒரு பெண், தன் இஷ்டத்திற்கு துணி அணிவதற்கு போராட வேண்டியுள்ளது எனில், மேற்கத்திய பாஷையில் சுதந்திரம் என்பது ஆடைகளைக் களைவது மட்டும் தானா?

கடந்த மார்ச் 2 - ந்தேதி 2005 அன்று வெளியான இத்தீர்ப்பு, தலையை மறைத்து பெண்கள் வெளியே வருவதை சட்டப் பூர்வமாக சென்ற வருடம் தடை செய்த ஃப்ரெஞ்சு அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி என்றால் அது மிகையில்லை.

இதன் மூலம் ஒரே சமயத்தில் பிரிட்டனில் வசிக்கும் 16 இலட்சம் முஸ்லிம்களுக்கு, "இறை நம்பிக்கையில் உறுதியுடன் இருந்தால் இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற எவரும் தடை விதிக்க இயலாது" என்பதையும் "கிடைக்காத உரிமையை, போராடினால் எவரும் பெற்றுக் கொள்ள முடியும்" என்ற அரிய பாடத்தையும் கற்பித்துள்ளார்.

இந்த பாடங்கள் நமக்கும் தான்.

அலுவலகங்களில் பணிகளுக்கு / வியாபாரங்களுக்கு இடையே தொழுகைக்கு நேரம் கொடுப்பதில்லை அல்லது தொழ இடம் கிடைப்பதில்லை என்றும், ஹிஜாப் அணிந்து பெண்கள் வெளியே (பள்ளிகளில் / கல்லூரிகளில் / அலுவலகங்களில் ) செல்ல தயங்கி பல்வேறு சாக்கு போக்குகளை நமக்கு நாமே கூறிக் கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் நமது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சி மூலம் சிந்திக்க வேண்டும்.

1 comment:

Abu Umar said...

///மேற்கத்திய பாஷையில் சுதந்திரம் என்பது ஆடைகளைக் களைவது மட்டும் தானா?///

பொது இடத்தில் ஆடைகளை களைவதும் அவர்களின் சுதந்திரம் என நினைக்கிறார்கள்.