Sunday, March 20, 2005

அன்பின் பாலம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாத்தில் சிறந்த செயல்...
பசித்தவருக்கு உணவளிப்பதும்
தெரிந்தவர் தெரியாதவர் பேதமின்றி ஸலாம் உரைப்பதும். -(புகாரி,முஸ்லிம்)


அல்லாஹ்விடத்தில் மனிதர்களில் உயர்ந்தவர்
ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பம் செய்பவரே!
(ஆபூதாவூத், திர்மிதி)

சாந்தியுடன் சுவனத்தில் நுழைய
ஸலாத்தினை பரப்புங்கள்,
பசித்தவருக்கு உணவளியுங்கள்,
உறங்கும் வேளையில் தொழுங்கள்!
(திர்மிதி,அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் சபையில் நுழைந்த
முதல் மனிதர் : அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறினார்.
நபி(ஸல்) : பத்து நன்மைகள்! - என்றார்கள்.
இரண்டாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக்கூறினார்.
நபி(ஸல்) : இருபது நன்மைகள்! – என்றார்கள்.
மூன்றாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ! எனக்கூறினார்.
நபி(ஸல்) : முப்பது நன்மைகள்!-எனப்பகர்ந்தார்கள். -(அபூ தாவூத்,திர்மிதி)

உங்களில் ஒருவர் சபைக்கு சென்றால் ஸலாம் கூறட்டும்,
சபையிலிருந்து வெயியேரும் போதும் ஸலாம் கூறட்டும்.

(அபூ தாவூத்,திர்மிதி)

ஒருவர் ஒருவீட்டில் நுழையும் முன் "அஸ்ஸலாமு அலைக்கும்" என அனுமதி கோரட்டும்.

சிறியவர் - பெரியவருக்கும்,
நடந்து செல்பவர்-அமர்ந்திருப்பவர்க்கும்,
குறைந்த எண்ணிக்கையுடைய கூட்டத்தார்-அதிக எண்ணிக்கையுடைய கூட்டத்தினருக்கும் ஸலாம் கூறட்டும். -(புகாரி, முஸ்லிம்)

No comments: