Wednesday, March 02, 2005

தொழுகை (பகுதி 4)

மூஸா நபியவர்களது மனைவி சபூரா அவர்கள், 'எச்சரிக்கையாக செல்லுங்கள் வழியில் பாம்பு தேள் ஆகியவை இருக்கலாம்..' என்று நெருப்பைக் கண்டு 'அங்கிருந்து வெளிச்சம் கொண்டு வருவதாக சொல்லி புறப்பட்ட மூஸா நபியவர்களிடத்தில் கூறிய போது மூஸா நபியவர்கள், 'என் காலில் செருப்பு உள்ளது தேளை செருப்பால் அடிப்பேன்..' என்று கூறினார்கள்.

அதன் பிறகு மூஸா நபியவர்களை இறைவன் அழைத்து, 'மூஸா! உம்முடைய காலணிகள் இரண்டையும் கழற்றி விடும்!'-என்று கூறினான். மூஸா நபி அவ்வாறு கழட்டியதும் அந்த செருப்பு தேளாக மாறியது.

புனிதமான துவா பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம் இது.

இந்த இடத்தில் காலணி என்பதற்கு பல மார்க்க அறிஞர்கள், விரிவுரையாளர்கள் என்று பலரும் பலவாறு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

சூபியாக்கள் விளக்கம் கொடுக்கும் பொழுது, இறைவனை காணும் போது இம்மை, மறுமை என ஈருலக நன்மைகளை நாடுவதை விட்டும் என்னை மட்டும் நாடியவனாக வாரும்! என்று சிந்திக்க தக்க நல்லதொரு விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

பள்ளிவாசலில் 'காலணிகளை இங்கே விடவும்' என்று எழுதியிருப்பார்கள். நாமும் இறைவன் பற்றிய சிந்தனையில் காலணிகளை(ஈருலக நன்மைகளை) விட்டுவிட்டு இறைவன் ஒருவனுடைய திருப்பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக உள்ளே சென்றால் பாங்கின் போது 'வெற்றி பெற வாருங்கள்' என்று அழைக்கிறார்களே அந்த வெற்றியை நிச்சயம் அடைய முடியும்.

ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் விண்ணேற்றத்தின் போது காலணிகளை கழற்ற முயன்ற போது 'முஹம்மதே! காலணிகளை அணிந்த வண்ணம் வாரும் என்று இறைவன் கூறியது அவர்களின் காலணி படும் பாக்கியத்தை 'அர்ஷ்' பெறட்டும் என்பதால் தான். அவர்களின் ஒளியிலன்றோ 'அர்ஷ்' படைக்கபட்டது.

தொடரும்...

3 comments:

nagoreismail said...
This comment has been removed by a blog administrator.
அபூ முஹை said...

அன்பின் சகோதரர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு!

நீங்கள் சூபியாக்களையும் மிஞ்சி வருகிறீர்கள், கதை சொல்வதில்.

Abu Umar said...

இஸ்மாயில் அண்ணா,
மேற்கண்டவாறு சூஃபியாக்கள் சொல்கிறார்கள் என்று சொல்லி, ஆனால் இதெல்லாம் தவறு என்று பிறகு சொல்வீர்களா? அப்படியில்லையென்றால் நான் முன்பு கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள். ஏனென்றால் அதற்கு பிறகு உங்கள் கதைகளைப்பற்றிய கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது.

இஸ்லாத்திற்கு எதிரான இதுபோன்ற கட்டுகதைகள் பற்றிய விழிப்புணர்வு சம்பந்தமாக, மார்க்க அறிஞர்கள் தொகுதி தொகுதியாக புத்தகம் போட்டிருக்கிறார்கள். இதற்கும் தொழுகைக்கும் என்ன சம்பந்தம்?

நேசகுமார் முகம்மது(ஸல்) அவர்களைப்பற்றி தவறாக விமர்ச்சனம் செய்தபோது உங்களின் நண்பரும் எனது புதிய நண்பருமான சலாஹுத்தீன் வைத்த "இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே" என்ற கட்டுரை சொன்ன விஷயத்தை மட்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.


http://islamanswers.blogspot.com/2005/02/blog-post_07.html

http://islamanswers.blogspot.com/2005/02/2.html
இஸ்லாமிய அறிஞர்கள், ஹதீஸ்கள் பற்றிய சரியான விழிப்புணர்வை அந்த நாட்களிலேயே உருவாக்கி இஸ்லாத்தை காப்பாற்றி விட்டார்கள்.

நேசகுமாருக்கு ஆரம்பகாலங்களிலேயே திண்ணையில் எதிர்ப்பு தெரிவித்த உங்களைப் போன்றோருக்கு, இதுபோன்ற கட்டுகதைகள், இஸ்லாத்தின் அடித்தளத்திற்கே எதிரானது என்பதை நான் விளக்கி சொல்ல வேண்டுமா? இதன் நடைமுறை சிக்கல்கள் கூடவா உங்களுக்கு விளங்கவில்லை?

எழுதுவதற்கு எத்தனையோ இருக்க இதுபோன்ற கட்டுக்கதைகள் எதற்கு?. இக்கட்டுக்கதைகள் சொல்லித்தான் தொழுகையை நிலைநாட்ட முடியுமா?

தயவு செய்து விளக்கமான பதில் தரவும்.