Monday, March 07, 2005

புதிய இணையதளம் வேண்டுமா?

செய்திஅலைகள் என்றொரு இணையதளம் நண்பர்களால் தொடங்கப்பட்டு எழுத்துதிறமைகளை வளர்த்து வந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு சில பக்கம் திறக்கப்பட தாமதமாகிறது. இப்பிரச்சினை அவ்விணையதளத்திற்கு உரியதல்ல. அப்பக்கத்திற்குரியது.

தற்போது பிரபலமாகியுள்ள வலைப்பதிவு சேவைகள் மற்றும் தமிழ்மணம் வலைப்பதிவாளர் அரங்கம் இவற்றின் பயனால் மக்கள் வலைப்பதிவுக்கு மாறியிருப்பது அனைவரும் அறிந்ததே.

இதற்கான காரணங்கள்:
1)செய்தியை தருபவர்கள் தனது ஆளுமைக்குள் நிர்வாகம் செய்வதை விரும்புகிறார்கள். உதாரணமாக எனது வலைப்பதிவை எனது விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்வது.(டிஷைன் மற்றும் பல...)

2)யுனிகோடின் பயன். இதனால் எழுத்துரு பிரச்சினைகள் இருப்பதில்லை. (X)

3)கட்டுரையை எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம். இதனை யாரும் மேலாண்மை செய்யப்போவதில்லை. பதிந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டிய அவசியமில்லை. வலைப்பதிவு, திரட்டி வழியே மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

புதிதான இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வலைப்பதிவை சிறிது காலங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு இணையதளம் ஆரம்பிக்கலாம். அல்லது டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்து அதனை வலைப்பதிவுக்கு திருப்பிவிடலாம். வெற்றி பெற்றால் தனி தளம்.

X] சகோதரர்கள் சிலர் வின்டோஸ்-98 பயன்படுத்துவதினால் யுனிகோடை பிரச்சினையாக கருதலாம். இந்தகட்டுரையை தட்டச்சு செய்ததுகூட வின்டோஸ்98-ஐ பயன்படுத்திதான். ஈழம்எடிட்டரை பயன்படுத்தினால் அலட்டிக்கொள்ள அவசியமில்லை. ஈழம் எடிட்டர் இன்னும் சோதனை ஓட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Sardhar said...

தங்களின் சேவைகளின் மூலம் நான் அறிந்து கொண்ட விபரங்கள், எனக்கும் எனது சில நண்பர்களுக்கும் நற்பயன்களை அளித்துள்ளது.

திறமை இருந்தும் "ஆர்வமிருந்தால் நேரமில்லை... நேரமிருந்தால் போதிய விஷயங்கள் தெரிவதில்லை" எனும் மனப்பான்மை உள்ள நம் சகோதரர்கள், இத்தகைய நிலையிலிருந்து மீண்டு வெளியே வந்து தங்கள் பார்வைகளை விசாலப்படுத்தி பயன் பெற வேண்டும்.