Tuesday, March 15, 2005

சொல்லட்டுமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நன்மைகளின் வாயில்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நோன்பு (பாவங்களைத் தடுக்கும்) கேடயமாகம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, அது பாவத்தைப் போக்கிவிடும் மேலும் நடு இரவில் (தஹஜ்ஜத்) தொழுவதுமாகும். விஷயத்தில் தலையானதையும் அதன் தூணையும், அதன் உச்சியையும் அறிவிக்கட்டுமா? விஷயத்தில் தலையானது இஸ்லாம், தூண் தொழுகை, உச்சி ஜிஹாத், இவையனைத்தையும் ஒன்று சேர்க்கும் உறுதியான விஷயத்தை அறிவிக்கட்டுமா நாவைத் தடுத்துக் கொள்வீராக மக்களை முகம்குப்புற நரகில் வீழ்த்துவது நாவின் விளைச்சல்கள்தான். எனப் பகர்ந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

(அறிவிப்பாளர் : முஆத்(ரலி), ஆதாரம் : திர்மிதி)

நன்றி: பட்டினத்தான்

1 comment:

நிர்வாகி said...

நன்னா சொல்லுங்கோ!
அதுக்குன்னு இப்படியா கன்வர்ட்டர் ஆன கோப்புகளை சரிபார்க்காமல் பதிவது!.

பிழைகளை சரிசெய்ய முடிந்தது ஒரு ஹதிஸில்தான். அதனால் மற்றதை நீக்கிவிட்டேன்.

நீங்கள் பயன்படுத்தியது பழைய கன்வர்ட்டர். அதுவும் சாதிக் அவர்களின் T-Serial எழுத்துருக்களை பயன்படுத்தியிருப்பதால் எல்லாம் பெட்டி பெட்டியா தெரிகிறது.

இப்படியே போனா தமிழ்முஸ்லிம் வலைப்பதிவுக்கு பெட்டிகட்டி அனுப்பிவிடுவார்கள்.

பாத்து பதியுங்கள். வித்தியாசமான விஷயத்தை மன்றத்தில் வையுங்கள். ஆன்லைன் குர்ஆன், ஆன்லைன் ஹதிஸ் நிறைய இணையத்தில் இருக்கிறது.